வெல்வோம் வா! - சுற்றுச்சூழல் கதை | Environment story - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/02/2019)

வெல்வோம் வா! - சுற்றுச்சூழல் கதை

து ஆப்பிரிக்க கண்டத்தின் துணை சகாரா பாலைவனத்தில் அமைந்திருக்கும் ஓர் இடம். மணி நள்ளிரவு 1:30. கறையான்களின் படைத்தளபதியும் அரசனும் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கறையான் புற்றில் வாழும் அனைத்துக் கறையான்களுமே போர் குணங்களோடு இருப்பதில்லை. படை வீரர்கள் தனிக் குழு. உணவுத் தேடி, புற்று கட்டிப் பராமரிக்கும் குடிமக்கள் தனி. முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் ராணி கறையான் தனி.

ஆனால், மெகாபொனேரா (Megaponera) எறும்புகள் அனைவருமே போர் வீரர்கள்; வேட்டைக்காரர்கள். ஆக்ரோஷமாகத் தாக்கி இரையை வீழ்த்துபவர்கள். அப்படிப்பட்ட எதிரிகளைத்தான் அந்தக் கறையான்கள் தினமும் சமாளிக்கின்றன.