சுட்டி சுட்டி ஸ்மார்ட் ரோபோக்கள்! | Robot Expo in Chennai - Chutti Vikatan | சுட்டி விகடன்

சுட்டி சுட்டி ஸ்மார்ட் ரோபோக்கள்!

குட்டீஸை, எதிர்கால ரோபோடிக் துறைக்கு வரவேற்கவும் ஊக்கப்படுத்தவும், ‘எஸ்பி ரோபோடிக்ஸ் மேக்கர் லேப்’ குழு,  மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில், ரோபோட் கண்காட்சி மற்றும் போட்டிகளை நடத்தியது.

நூற்றுக்கணக்கான சுட்டிகள், தங்களது குட்டிக் குட்டி ரோபோக்களுடன் பங்கேற்று அசத்தினர்.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை எனப் பல நகரங்களில் நடத்தப்படும்  இந்தப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள், இறுதிப் போட்டிக்குத் தேர்வுசெய்யப்பட்டு, சிங்கப்பூரில் நடக்கும்  நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் ரோபோ, கால்பந்து விளையாடும் ரோபோ, விபத்தின்றி சாலையில் செல்லும் தானியங்கி ரோபோ, விவசாயத்துக்குப் பயன்படும் ரோபோ என ஒவ்வொன்றும் அசரவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick