அணிலாக உருமாறிய ஆரோன்! | Short Story - Chutti Vikatan | சுட்டி விகடன்

அணிலாக உருமாறிய ஆரோன்!

சுற்றுச் சூழல் கதை

ரோன் சுற்றுச்சூழலை அதிகமாக நேசிக்கும் சிறுவன். அவன் பெற்றோர் வாங்கித்தரும் புத்தகங்கள், பெரும்பாலும் இயற்கை சார்ந்தவையே. அன்றும் அப்படியொரு புத்தகம் அவனுக்குக் கிடைத்தது. ஆனால், அதைப் பெற்றோர் வாங்கித் தரவில்லை.

அன்று மாலை ஆரோன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும்போது, இரண்டு தெருநாய்கள் ஓர் அணிலைத் துரத்திக்கொண்டிருந்தன. அதைப் பார்த்த ஆரோன், போராடி அணிலைக் காப்பாற்றினான். தன் உயிரைக் காப்பாற்றிய ஆரோனுக்கு, தானே எழுதிய ஒரு புத்தகத்தைக் கொடுத்தது. ஓர் அணிலின் கைகளில் தவழும் புத்தகம் எவ்வளவு பெரிதாக இருந்துவிடும்?

ஆம், இரண்டு சென்டிமீட்டரே இருந்தது அந்தப் புத்தகம். பனை இலைகளைக் காகிதமாகப் பயன்படுத்தி எழுதப்பட்டது. அதை ஒரு மரப்பட்டைக்குள் வைத்து அவனிடம் கொடுத்தது. அந்தக் குட்டிப் புத்தகத்துடன் வீடு திரும்பினான் ஆரோன். அதைச் சீக்கிரமே படித்துவிடும் ஆர்வம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick