ஆட்டம் ஓட்டம் கவனம்! | Tips for kids playing in Park - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)

ஆட்டம் ஓட்டம் கவனம்!

பூங்கா, தெரு என்று ஓடியாடி விளையாடும்போது எப்படியெல்லாம் கவனமாக இருக்கணும்? சொல்கிறார், விருதுநகரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கதிரேசன்.

செயின், தாயத்துக் கயிறு, ஸ்கார்ஃப் போன்றவற்றை அணிந்திருந்தால் கவனம். எதிலேனும் சிக்கி இழுத்துவிடும்.

வீட்டு முகவரி, பெற்றோர்களின் தொலைபேசி எண்ணை ஒரு தாளில் எழுதி வைத்திருங்கள்.

விளையாடும் பகுதியில் நாய்கள் இருந்தால் தள்ளிச்சென்று விளையாடுங்கள்.

பூங்காவில் விளையாடும்போது, அங்குள்ள விளையாட்டுச் சாதனங்கள் நல்லநிலையில் உள்ளதா என்று கவனிக்கவும்.

கண்ணாடித் துண்டுகள், முள் போன்றவை தரையில் இருக்கலாம். காலணிகள் இல்லாமல் விளையாடாதீர்கள்.