காமிக்ஸ் | History of Comics - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/03/2019)

காமிக்ஸ்

182. இத்தாலிய காமிக்ஸ் ஹீரோ, டெக்ஸ் வில்லர். இவரை 1948-ஆம் ஆண்டு, ஜ்யான்லூயிஜி போனெல்லி உருவாக்கியபோது, ‘டெக்ஸ் கில்லர்’ என்றே பெயரிட்டார். போனெல்லியின் மனைவியும் எடிட்டருமான டியா, ‘கில்லர்’ என்ற எதிர்மறை பெயர் வேண்டாம்’ என்று யோசித்து வில்லர் என மாற்றினார்.

183. சிறுவர் இலக்கியத்தின் ஜாம்பவான், முல்லை தங்கராசன் உருவாக்கிய ‘திருப்பதி ஏழுமலையானின் வாழ்க்கை வரலாறு’ என்ற காமிக்ஸ் புத்தகமே, தமிழில் அதிக முறை பதிப்பிக்கப்பட்ட காமிக்ஸ். தமிழில் அதிகமாக விற்ற காமிக்ஸ் புத்தகம்   (5 லட்சம் பிரதிகள்), அதிக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது (12 மொழிகள்) ஆகிய சிறப்புகளைக்கொண்டது.

184.  இத்தாலிய படத் தயாரிப்பாளரான டினோ-டி-லாரண்டிஸ், ‘ஃப்ளாஷ் கார்டன்’ என்ற காமிக்ஸ் தொடரின் திரைப்பட உரிமையை வைத்திருந்தார். இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ், ஃப்ளாஷ் கார்டனைத் திரைப்படமாக எடுக்க விரும்பி, 1973-ஆம் ஆண்டில் கேட்டார். லாரன்டிஸ் மறுக்க, அத்தொடரை மனதில் வைத்து ஜார்ஜ் லூகாஸ் இயக்கியதுதான், ‘ஸ்டார் வார்ஸ்’ திரைப்படம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close