தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள் | Exam tips for Students - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/03/2019)

தேர்வு டிப்ஸ்: இயல்பாகப் படிக்கலாம்... இனிதாக ஜெயிக்கலாம்! - உடல், உள்ளம், பாடங்கள்

ன்புச் சுட்டி நண்பர்களே...

வணக்கம்.

ஆண்டுத் தேர்வு என்ற பரபரப்பான கட்டத்தில் இருக்கிறீர்களா? திரும்பிய பக்கமெல்லாம் `படி படி... இன்னும் படி' என்ற வார்த்தையே ஒலிக்கிறதா? படியுங்கள்... ஆனால், பரபரப்பாகவோ, பதற்றமாகவோ படிக்காதீர்கள்.  இயல்பாக, இனிதாக விஷயங்களை உள்வாங்கிப் படியுங்கள்.

`நாம் போருக்குப் போகவில்லை. ஆண்டு முழுவதும் படித்ததை எந்த அளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறோம்  என்பதை அறிவதற்காகவே தேர்வு எழுதப்போகிறோம்' என்ற எண்ணத்துடன் தயாராகுங்கள். அதை உங்களுக்குச் சொல்வதுதான் இந்த இணைப்பிதழ். ஆசிரியர்கள், குழந்தைகளின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் செயல்படும் மருத்துவர்கள், நிபுணர்களின் அக்கறையான வார்த்தைகளில் ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.