கவனி கவனி கலோரி! | Exercises for reduce Calorie - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

கவனி கவனி கலோரி!

கே.எஸ்.கே

நாம் சாப்பிடும் உணவு வகைகளில் உள்ள புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் ஆகியவைதாம் நம் உடலுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றன. இந்தச் சக்தியை ‘கலோரி’ என்று கணக்கிடுவார்கள். ‘வயது, செய்யும் வேலை, ஆண்-பெண் ஆகிய அடிப்படையில், ஒவ்வொருவரின் உடம்பிலும் நாள் ஒன்றுக்கு இவ்வளவு கலோரி இருக்க வேண்டும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். உதாரணமாக, 4 முதல் 6 வயதுள்ள சிறுவர்/சிறுமிகள் இருவருக்கும் 1,350 கலோரிகள் தேவை. 7 முதல் 9 வயதுள்ளவர்களுக்கு 1,690 கலோரிகள் தேவை. 10-12 வயதுள்ள சிறுவர்களுக்கு 2,190 கலோரியும், சிறுமிகளுக்கு 2,010 கலோரியும் தேவை. 13-15 வயதுள்ள சிறுவர்களுக்கு 2,750 கலோரியும், சிறுமிகளுக்கு 2,330 கலோரியும் தேவை. இதற்கு மேற்பட்டு நம் உடம்பில் தங்கும் கலோரியைச் சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் எரிக்கலாம். அவை என்னென்ன?

நீங்க எப்படி பீல் பண்றீங்க