உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை | Chutti stars share about Mango - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/05/2019)

உலகம் சுவைக்கும் கனி! - மாந்தோப்பு டு மாம்பழக் கடை

சேலம் என்றாலே நினைவுக்கு வருவது மாம்பழம்தான். சேலம் ஸ்டார் ஸ்பெஷலில் மாம்பழம் இல்லாட்டி எப்படி? ஒரு மாந்தோப்பில் ஆரம்பிச்சு மாம்பழக் கடை வரை ரவுண்டு வரலாமா ஃப்ரெண்ட்ஸ்!

சேலம் அருகே மல்லூரில் உள்ள மாம்பழ விவசாயி அல்லிமுத்து, எங்களை மாம்பழத் தோப்புக்கு அழைத்துச் சென்றார். பசுமையான மரங்களும் மாங்கனிகளின் நறுமணமும் எங்களை வரவேற்றது. தோப்பை சுற்றிச் சுற்றி வந்தோம். கையருகே தொங்கும் மாங்காய்களைத் தொட்டு மோந்து பார்த்தோம். மாம்பழங்கள் குறித்து அல்லிமுத்து நிறைய பேசினார்.