Published:Updated:

அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு

விகடன் விமர்சனக்குழு
அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு
அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு

சென்னை, ஆக.23,2011

அண்ணா ஹஜாரே போராட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா கோரி போராடி வரும் அண்ணா ஹஜாரேவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். ##~~##

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதா நிறைவேறுவதற்காக போராடி வரும் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு எனது மனப்பூர்மான ஆதரவைத் தெரிவிக்கிறேன்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அர்ப்பணிப்பு மிக்க தலைவராக அண்ணா ஹஜாரே வழிநடத்திச் செல்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

இந்த ரத்தம் சிந்தா புரட்சிக்கு தங்கள் ஆதரவை நல்கியுள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்யாகிரகத்தின் பிறப்பிடமான இந்தியாவில் மட்டுமே இத்தகைய அமைதியான இயக்கம் சாத்தியம்," என்று நடிகர் ரஜினிகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.