Published:Updated:

`ஒடஞ்சிருந்தாலும் தங்கம் சார்...'- டியர் சிஎஸ்கேயன்ஸ்... ரெய்னாவின் இந்த அடி ஞாபகம் இருக்கா?

தோற்கிற பக்கம் இருந்து வருகிற ஒரு ப்ளேயரின் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ் பெரியளவில் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவதில்லை. இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு. சில விதிவிலக்குகளும் உண்டு!

எவ்வளவு பெரிய பெஸ்ட் பேட்டிங் - பௌலிங் பர்ஃபாமன்ஸ் ஒரு ப்ளேயரிடமிருந்து வந்தாலும் இறுதியில் அந்த அணி வெற்றி பெறும்பட்சத்தில்தான் அந்த வீரரின் பெயரும் அவரின் ஆட்டமும் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். தோற்கிற பக்கம் இருந்து வருகிற ஒரு ப்ளேயரின் பெஸ்ட் பர்ஃபாமன்ஸ் பெரியளவில் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவதில்லை. இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு. சில விதிவிலக்குகளும் உண்டு!

Raina
Raina

டீமை வெற்றிபெறவைக்கிற அந்த பெஸ்ட் பர்ஃபாமென்ஸ் வொர்த்தானது என்றால், இன்னொரு பக்கம் மேட்சில் தோற்றாலும்கூட, எதிர் டீமுக்கு மரண பயத்தைக் காட்டுகிற அளவுக்கு ஒருத்தன் நின்று விளையாடியிருப்பான் இல்லையா? அந்த நெவர் கிவ் அப் பர்ஃபாமன்ஸ்தான் செம கெத்தானது. இதில் அன்று ரெய்னா ஆடியது செம கெத்தான இரண்டாவது ரகம்.

2014-ம் ஆண்டு ஐபிஎல் 7-வது சீஸனின் ப்ளே ஆஃபில் எலிமினேட்டர் போட்டியில் மும்பையை ஈஸியாகத் தோற்கடித்து க்வாலிஃபையருக்குத் தகுதியானது சூப்பர் கிங்ஸ். இந்த மேட்சிலும் அரைசதம் அடித்து ரெய்னாதான் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். அடுத்து க்வாலிஃபையர் ஆட்டம் கிங்ஸ் லெவனுக்கு எதிராக உண்மையிலேயே அந்த சீஸனில் கிங்ஸ் லெவன் பெயருக்கேற்றவாறு பர்ஃபாமன்ஸிலும் கிங்காக இருந்தது. மேக்ஸ்வெல் அந்த சீஸனின் டிரெண்டிங் ப்ளேயர். தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஒரு காட்டு காட்டிக்கொண்டிருந்தார். சிஎஸ்கே லீக் சுற்றில் இரண்டு முறையும் கிங்ஸ் லெவனுடன் மோதி தோல்வியையே தழுவியிருந்தது. இப்போது மூன்றாவது முறையாக க்வாலிஃபையரில் மீண்டும் கிங்ஸ் லெவனுடன்!

Suresh Raina
Suresh Raina
BCCI

கிங்ஸ் லெவன் முதல் பேட்டிங். எல்லாரும் மேக்ஸ்வெல்லின் அதிரடிக்கு காத்திருக்க யாரும் எதிர்பார்த்திராத வகையில், இந்திய அணியின் தேர்வாளர்கள் மீது கடுப்பிலிருந்த சேவாக், தோனியின் சூப்பர் கிங்ஸ் பௌலிங்கைப் பிரித்து மேய்ந்துவிட்டார். அஷ்வின், ஜடேஜா, நெஹ்ரா என எல்லா பௌலர்களையும் பறக்கவிட முதல் பந்தில் பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கி போதும் போதும் என்னும் அளவுக்கு பொளந்து கட்டிவிட்டார் சேவாக். அவர் 58 பந்துகளில் 122 ரன்கள். 8 சிக்ஸர், 12 பவுண்டரிகள். வெறித்தன ஆட்டம் ஆடி டீம் ஸ்கோர் 226.

சேவாக் ஆடியதே அவ்வளவு மாஸான இன்னிங்க்ஸ். ஆனால், அதே மேட்ச்சில் சேவாக்கின் இன்னிங்ஸை மென்று தின்று ஏப்பம் விடும் அளவுக்கு ஒரு பர்ஃபாமன்ஸ் இருந்தால் எப்படியிருக்கும்? இருந்தது அந்த மேட்ச்சில் அப்படியொரு வெறித்தனமான மாஸ் பெர்ஃபாமன்ஸ் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

120 பந்துகளில் 227 ரன்கள் அடிக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு ஓவருக்கு 12 ரன்கள் அடிக்க வேண்டும். டுவெயின் ஸ்மித், டுப்ளெஸ்ஸி என இரண்டு ஓவர்சீஸ் ப்ளேயர்கள் ஓப்பனிங் இறங்கினர். அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே டூ ப்ளெஸ்ஸி டக் அவுட். ஒன் டவுன் வந்தார் சுரேஷ் ரெய்னா. இறங்கியது முதலே சரவெடிதான். நின்றது ஆறே ஓவர், சந்தித்தது இருபத்தைந்தே பந்துகள். ஆனால், எடுத்தது 87 ரன்கள். 6 ஓவர் முடிவிலேயே சூப்பர் கிங்ஸ் 100 ரன்களைத் தொட்டுவிட்டது. பவர்ப்ளேயின் உண்மையான அர்த்தம் அன்றுதான் பலருக்கும் புரிந்தது. பொதுவாக ரெய்னாவைக் கட்டுப்படுத்த பௌலர்கள் கையிலெடுக்கும் ஷார்ட் பால் யுக்தி எதுவும் இந்த மேட்சில் கைகொடுக்கவில்லை. ஜான்சனின் ஷார்ட் பால்களையெல்லாம் அலேக்காக ஃபைன் லெக்கில் பவுண்டரியாக்கினார் ரெய்னா. ஸ்ட்ரையிட் பவுண்ட்ரிகளை டார்கெட் செய்து லாங் ஆன்-லாங் ஆஃபில் சந்தீப் ஷர்மா - பர்வீந்தர் அவானாவின் பந்துகளை பறக்கவிட்டார். ரெய்னா ஸ்பெஷல் இன்சைட் அவுட் ஷாட்களுக்கும் பஞ்சமில்லை. அவானா வீசிய 6-வது ஓவரில் மட்டும் 33 ரன்களை எடுத்து பவர்ப்ளேயில் மட்டும் சூப்பர் கிங்ஸை 100 ரன்களை தொட செய்தார். நாக்-அவுட் ப்ரெஷெர் எதுவும் இல்லாமல் ரெய்னா அடித்து துவம்சம் செய்ததால் 227 டார்கெட்டையெல்லாம் 15 ஓவருக்குள் எட்டிவிடலாம் என்ற நிலையில் இருக்கும்போது, 7-வது ஓவரின் முதல் பந்தில் சர்க்கிளுக்கு உள்ளேயே தட்டிவிட்டு மெக்கல்லம், ரெய்னாவை சிங்கிளுக்கு அழைக்க கேப்டன் பெய்லி ஹைஸ்பீடில் பந்தை பிடித்து டைரக்ட் ஹிட் அடிக்க ரெய்னா காலி. ஒரு பிரமாதமான பேட்டிங் பிரமாதமான ஃபீல்டிங்கால் முடிவுக்கு வந்தது. ரெய்னா அமைத்துக்கொடுத்த அந்த அதிரடியான பேஸே சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற போதுமானதாகத்தான் இருந்தது. ஆனாலும், அடுத்தடுத்த வீரர்களின் சொதப்பலால் தோல்வியைத் தழுவியது.

ரெய்னா
ரெய்னா

தோல்விக்குப் பிறகு தோனியும் 'இர்ரெஸ்பான்ஸிபிள் இன்டர்நேஷனல் ப்ளேயர்ஸ்' எனக் கொஞ்சம் கடுமையாகவே பேசினார்.

அந்த ஒரு ரன் அவுட் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், மாவீரன் க்ளைமாக்ஸில் ஒத்தையாக நின்று 100 பேரை வெட்டி வீசி கம்பீரமாக வாளை உயர்த்திய பாகுபலிபோல் ரெய்னாவும் ஒத்தையாக நின்று சிஎஸ்கேவை கம்பீரமாக வெற்றி பெற செய்திருப்பார். தனிப்பட்ட முறையில் ஐபிஎல்-ன் எல்லா ரெக்கார்ட் லிஸ்ட்டிலும் ரெய்னாவின் பெயரும் டாப்பில் இருந்திருக்கும்.

வெற்றி தோல்வியைத் தாண்டி சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் சின்ன தல ரசிகர்களும் எப்போதும் மனதில் வைத்து போற்றும் கோல்டன் இன்னிங்ஸ் அது.

'ஒடஞ்சிருந்தாலும் தங்கம் சார்...'
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு