Published:Updated:

`இதுவரை 13 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை...' - `வேங்கைவயல்' விவகார அப்டேட்!

`வேங்கைவயல்' விவகார அப்டேட்!
News
`வேங்கைவயல்' விவகார அப்டேட்!

வேங்கைவயலைச் சேர்ந்த இரண்டு பேர், இறையூரைச் சேர்ந்த ஏழு பேர், மேலமுத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேரும் பரிசோதனைக்கு வந்திருந்தனர். 10 பேரிடமும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Published:Updated:

`இதுவரை 13 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை...' - `வேங்கைவயல்' விவகார அப்டேட்!

வேங்கைவயலைச் சேர்ந்த இரண்டு பேர், இறையூரைச் சேர்ந்த ஏழு பேர், மேலமுத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேரும் பரிசோதனைக்கு வந்திருந்தனர். 10 பேரிடமும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

`வேங்கைவயல்' விவகார அப்டேட்!
News
`வேங்கைவயல்' விவகார அப்டேட்!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் வேங்கைவயல் கிராமத்தில், குடிநீரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார், 120 பேரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதற்கிடையே, இந்த வழக்கில், சி.பி.ஐ விசாரணைக் கோரி சிலரால் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, ஒரு நபர் குழு விசாரணையும் தொடங்கியிருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - புதுக்கோட்டை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - புதுக்கோட்டை

இதற்கிடையே, ஏற்கெனவே தடயவியல் பரிசோதனைக்கு, அனுப்பப்பட்ட மலம் மாதிரிகளின் சோதனை முடிவில், ஒரு பெண், இரண்டு ஆண்களுடைய மலம் என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீஸார், புதுக்கோட்டை ஆதிதிராவிடர் வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தை அணுகி, சந்தேகப்படுவர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த அனுமதி கேட்டிருந்தனர். அதனடிப்படையில் முதற்கட்டமாக, வேங்கைவயலைச் சேர்ந்த 9 பேர், காவேரி நகர், கீழமுத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த இருவர் என 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களைப் பரிசோதனைக்காக அழைத்திருந்தனர். இந்த நிலையில், பரிசோதனைக்கு மூன்று பேர்தான் ஆஜராகியிருந்தனர். எட்டு பேர் வரவில்லை. எட்டு பேர் தரப்பில் டி.என்.ஏ பரிசோதனைக்குத் தடை கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.

கடந்த வாரம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தரப்பிலிருந்து மேலும், 10 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். பரிசோதனை செய்துகொள்ள நீதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்பந்தப்பட்ட 10 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஜராக வேண்டுமென சம்மன் கொடுத்தனர். இதையடுத்து, வேங்கைவயலைச் சேர்ந்த இரண்டு பேர், இறையூரைச் சேர்ந்த ஏழு பேர், மேலமுத்துக்காடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேரும் பரிசோதனைக்கு வந்திருந்தனர். 10 பேரிடமும் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே மூன்று பேர், தற்போது 10 பேர் என இதுவரை 13 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

`இதுவரை 13 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை...' - `வேங்கைவயல்' விவகார அப்டேட்!

இது பற்றி சி.பி.சி.ஐ.டி போலீஸார் தரப்பில் விசாரிக்கும்போது, "அறிவியல்ரீதியான தடயங்களை வைத்துதான் இந்த வழக்கில் குற்றவாளியை இறுதிசெய்ய முடியும். அதற்கான முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறோம். யாரையும் குறிப்பிட்டு, குற்றவாளியாக்க வேண்டும் என்ற நோக்கில், இந்த டி.என்.ஏ பரிசோதனை நடத்தவில்லை. முதலில் அழைத்த 11 பேரில், எட்டு பேர் ஆஜராகவில்லை. தற்போது, 10 பேர் ஆஜராகியிருக்கின்றனர். நீதிமன்ற வழிகாட்டுதலுக்குப் பிறகு, மீண்டும் சம்மன் அனுப்பி அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்வோம். தொடர்ந்து, தேவையைப் பொறுத்து அடுத்தடுத்த கட்டங்களில் டி.என்.ஏ பரிசோதனை நடைபெறும்" என்றனர்.