Published:Updated:

ஓடும் பேருந்திலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்ட பெண்! - பணியிட மிரட்டலால் விபரீத முடிவு

தற்கொலை செய்துகொண்ட பெண்
News
தற்கொலை செய்துகொண்ட பெண்

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மிரட்டியதால், ஓடும் பேருந்திலிருந்து ஊராட்சிப் பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

ஓடும் பேருந்திலிருந்து குதித்து, தற்கொலை செய்துகொண்ட பெண்! - பணியிட மிரட்டலால் விபரீத முடிவு

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மிரட்டியதால், ஓடும் பேருந்திலிருந்து ஊராட்சிப் பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை செய்துகொண்ட பெண்
News
தற்கொலை செய்துகொண்ட பெண்

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மிரட்டியதால், ஓடும் பேருந்திலிருந்து ஊராட்சிப் பெண் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமங்கலம்
திருமங்கலம்

மதுரை மாவட்டம், திருமங்கலத்துக்கு அருகேயுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிஷிவானி என ஐந்து பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கணேசன் கோவையில் ஒரு பட்டறையில் வேலை பார்த்துவருகிறார்.

``வருமானம் போதவில்லை, ஐந்து பெண் குழந்தைகளோடு கஷ்டப்படுகிறேன். ஏதாவதொரு வேலை வழங்குங்கள்" என நாகலட்சுமி மனு கொடுத்ததால், அவருக்குக் கருணை அடிப்படையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராகப் பணி வழங்கி உத்தரவிட்டார் மதுரை கலெக்டர்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக நாகலட்சுமி பணிக்குச் சென்றபோது மையிட்டான்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன், ஊராட்சி கிளார்க் முத்து ஆகியோர் நாகலட்சுமியைத் தரக்குறைவாகப் பேசி, `இனி நீ வேலை செய்யக்கூடாது' எனக் கூறி மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து போலீஸில் நாகலட்சுமி புகாரளித்திருக்கிறார்.

நாகலட்சுமி
நாகலட்சுமி

ஆனால், மீண்டும் அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையிலிருந்த நாகலட்சுமி, இன்று மதியம் மதுரை கலெக்டரிடம் புகார் செய்யப்போவதாகச் சொல்லி மையிட்டான்பட்டியிலிருந்து அரசுப் பேருந்தில் இரண்டு குழந்தைகளுடன் கிளம்பியிருக்கிறார்.

இந்த நிலையில், சிவரக்கோட்டையை பேருந்து கடந்தபோது, குழந்தைகளை அருகில் இருந்தவர்களிடம் ஒப்படைத்த நாகலட்சுமி, கூடவே ஒரு கடிதத்தையும் கொடுத்திருக்கிறார். அவர்கள் என்னவென்று விசாரிப்பதற்குள், திடீரென பேருந்திலிருந்து குதித்தார்.

தகவலறிந்து அங்கு வந்த கள்ளிக்குடி போலீஸார், காயங்களுடன் கிடந்த நாகலட்சுமியை ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாகலட்சுமி எழுதிய கடிதத்தில் ``100 நாள் வேலைத் திட்டப் பொறுப்பாளராகப் பணிபுரிய கலெக்டர் பணி வழங்கினார். ஆனால், `அந்த வேலையை வழங்க மாட்டேன்' என்று மையிட்டான்பட்டி வார்டு உறுப்பினர்கள் வீரகுமார், பாலமுருகன், கிளார்க் முத்து ஆகியோர் தவறாகப் பேசி என் மனதைக் காயப்படுத்தினார்கள். கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதற்கும் தகாத வார்த்தைகளால் திட்டியதால் தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்தேன். எனக்கு ஐந்து பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் வேலை கேட்டது தவறா... என் தற்கொலைக்கு முக்கியக் காரணம் மையிட்டான்பட்டி ஊராட்சி கிளார்க் முத்து, வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் அடிக்க கை ஓங்கி அசிங்கப்படுத்தியதுதான்" என்று குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நாகலட்சுமி
நாகலட்சுமி

``100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடுகள் நடக்கின்றன. தொடக்கத்திலிருந்தே நாகலட்சுமியைப் பணி செய்யவிடாமல் வார்டு உறுப்பினர்கள், கிளார்க் ஆகியோர் மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசியதாக நாகலட்சுமியின் கணவர் கணேசன் புகாரளித்திருக்கிறார். கலெக்டர் கடிதம் கொடுத்து பணிக்குச் சேர்ந்த பெண்ணையே வேலை பார்க்கவிடாமல் செய்ததோடு, தற்கொலை செய்யவைத்து ஐந்து பெண் குழந்தைகளைப் பரிதவிக்கச் செய்துவிட்டனர்" என்கின்றனர் நாகலட்சுமியின் உறவினர்கள்.

இந்தச் சம்பவம் திருமங்கலம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.