2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 டாப் 10 பிரச்னைகள் - அவசியம் ஆவணப்பதிவுகள்!

2018 டாப் 10 பிரச்னைகள் - அவசியம் ஆவணப்பதிவுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
2018 டாப் 10 பிரச்னைகள் - அவசியம் ஆவணப்பதிவுகள்!

குடவாயில் பாலசுப்ரமணியன் வரலாற்று ஆய்வாளர்

2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

செ
ப்புத் திருமேனிகள், சிற்பங்க ளெல்லாம் வெறும் வழிபாட்டுத்தன்மை கொண்டவை மட்டுமல்ல, தமிழகத்தின் கலை, பண்பாட்டுப் பொக்கிஷங்களும்கூட. அதனால்தான் அவற்றைப் பல கோடிகள் விலைகொடுத்து வாங்க வெளிநாட்டினர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

2018 டாப் 10 பிரச்னைகள் - அவசியம் ஆவணப்பதிவுகள்!

அரிய செல்வங்களாக நாம் பாதுகாக்க வேண்டிய நிறைய திருமேனிகளும் சிற்பங்களும் இங்கிருந்து கடத்தப்பட்டுவிட்டன. அப்படிக் கடத்தப்பட்ட பல சிலைகளை மீட்ட ஒரு பொன்னான ஆண்டாக 2018-ம் ஆண்டைக் குறிப்பிடலாம். இதுவரை நிகழாத ஒரு புதிய திருப்பத்தினை இந்த ஆண்டு ஏற்படுத்தியது. இதற்காகத் தமிழகம், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், அதன் ஆணைகளைச் செயல்படுத்திய பொன்.மாணிக்கவேல் தலைமையிலான நிபுணத்துவமிக்க தமிழகக் காவல்துறை வல்லுநர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறது. 

2018 டாப் 10 பிரச்னைகள் - அவசியம் ஆவணப்பதிவுகள்!

திருக்கோயில்களிலிருந்து விலைமதிக்க இயலாத சிலைகளையும் ஆபரணங்களையும், பிற தொல்லியல் சார்ந்த பொருள்களையும் களவாடி, பிறமாநிலங்கள் வழியே வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது என்ற தொழில் தொடர்ந்து ஒரு நூறாண்டுக்காலமாக நிகழ்ந்துவருகிறது. ஆனால், இவற்றில் பெரும்பாலான களவுகள் முறையாகப் பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளன.  பொதுமக்களும் இவை பற்றி அதிகமாகக் கவலைப்படாமல் இருந்ததால் இந்தத் தொழில் காலப்போக்கில் அசுர வளர்ச்சி பெறலாயிற்று.

தொடக்க காலத்தில் நடராசர் சிலைகளை மட்டும் திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தவர்கள் பின்பு எல்லா வகையான உலோகம் மற்றும் கற்சிலைகளையும் பெருமளவில் கடத்தத் தொடங்கினர். பெரிய கோயில்களின் மாடங்களில் (கோஷ்டம்) உள்ள கற்சிலைகளைத் துணியால் போர்த்தி விடுவதால் (வஸ்திரம்) அவற்றைப் போலியாக மாற்றும்போது யார் கண்ணிலும் தெரிவதில்லை. பல ஆண்டுகள் கழித்தே அவை வெளிச்சத்திற்கு வருகின்றன. இதுபோலவே, கோயில்களில் உள்ள மன்னர்கள் கால ஆபரணங்கள், பாத்திரங்கள் பற்றிப் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் தெரிய வாய்ப்பே இல்லை. இவ்வகையான கலைப்பொருள்களின் கடத்தல்களுக்கு அங்குள்ள வேலியே துணையாக நின்றுவிடுகிறது. சில ஆலயங்களிலிருந்து மன்னர்கள் காலச் செப்பேடுகள் மறைந்துள்ளன. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் எந்த ஒரு கோயிலிலும் முறையான ஆவணப்பதிவுகள் கிடையாது. 

2018 டாப் 10 பிரச்னைகள் - அவசியம் ஆவணப்பதிவுகள்!

சோழப்பேரரசர்கள் காலத்தில், கோயில்களில் உள்ள சொத்துகளின் கணக்குகள் கோயிலில் வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் நகல்கள் உள்ளூர் சபையிலும், அரசு தலைமை ஆவணக் கருவூலத்திலும் இருந்தமையால் ஒரு குண்டுமணி அளவு களவுபோனாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். அந்த வகை ஆவணப்பதிவுகள் இன்றுவரை நம்மிடம் கிடையாது. தஞ்சை அரண்மனை நூலகத்திலிருந்து அண்மைக்காலத்தில் ஓர் அரிய பொக்கிஷம் கடத்தப்பட்டது. அது தமிழ்நாட்டில் அச்சான முதல் தமிழ் நூல். அந்நூலில், சரபோஜி மன்னரின் கையொப்பம் இருந்தது. அதனால் அதன் மதிப்பு உலகச் சந்தையில் பலகோடி ரூபாய். இந்தக் களவு, இன்றுவரை மூடி மறைக்கப்பட்டே வருவது வேதனை தருவதாகும். இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்துதான் மிகுந்த அளவில் கலைப்பொருள்களும், அரும்பொருள்களும் கடத்தப்படுகின்றன. அவற்றில் 90 விழுக்காடு சோழ மண்டத்திலிருந்துதான் நிகழ்கின்றன.

சேக்கிழார் பெருமான், மன்னன் ஒருவனின் கடமை என்ன என்பதை ‘மாநிலங் காவலன் என்பான்’ எனத் தொடங்கும் பாடலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். `மாநிலக் காவலனாலும், அவன் உறவினர்களாலும், பகைவர்களாலும், திருடர்களாலும், விலங்குகளாலும் ஏற்படும் ஐந்து வகையான இடர்ப்பாடுகளிலிருந்து மக்களையும் அவர்தம் உடைமைகளையும் காப்பாற்றுவதே கடமை' எனக் கூறியுள்ளார். அரசர்களுக்கு மட்டுமல்ல, அந்தக்கடமை ஜனநாயக அரசுக்கும் உண்டு.