அரசியல்
அலசல்
Published:Updated:

வெளியே பெட்டிக்கடை... உள்ளே கருக்கலைப்பு மையம்! - திருவண்ணாமலை திகில்!

வெளியே பெட்டிக்கடை... உள்ளே கருக்கலைப்பு மையம்! - திருவண்ணாமலை திகில்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெளியே பெட்டிக்கடை... உள்ளே கருக்கலைப்பு மையம்! - திருவண்ணாமலை திகில்!

வெளியே பெட்டிக்கடை... உள்ளே கருக்கலைப்பு மையம்! - திருவண்ணாமலை திகில்!

ஸ்கேன், கருக்கலைப்பு சிகிச்சை வசதி போன்றவை பரவலாக இல்லாத சூழ்நிலையில், பெண் சிசுக்கொலை அதிக அளவிலிருந்தது. தற்போது, நவீன மருத்துவ வசதிகள் வந்துவிட்ட சூழலில், சட்டவிரோத கருக்கலைப்பு மூலம் பெண் குழந்தையைக் கருவிலேயே கொன்றுவிடுகிறார்கள். திருவண்ணாமலையில் ஒரு சிறு பெட்டிக்கடையில் கருக்கலைப்பு மையத்தை நடத்திவந்த தம்பதியரைப் பொறிவைத்து பிடித்திருக்கிறது திருவண்ணாமலை மாவட்டக் காவல் துறை.

வெளியே பெட்டிக்கடை... உள்ளே கருக்கலைப்பு மையம்! - திருவண்ணாமலை திகில்!

திருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகம் நடைபெறுவதாக மாவட்ட கலெக்டருக்கு ஒரு தகவல் வந்திருந்தது. சுகாதாரத் துறையினரை உஷார்படுத்திய மாவட்ட நிர்வாகம், இதுதொடர்பாக கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தியிருந்தது. அதன்படி ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கண்காணித்தபோதுதான், திருவண்ணாமலை அவலூர் பேட்டை சாலையில் இயங்கிவந்த போலி கருக்கலைப்பு மையத்தைக் கண்டுபிடித்திருக்கிறது காவல் துறை.

இந்தச் சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி-யான சிபி சக்கரவர்த்தியிடம் பேசினோம். “கலசபாக்கத்துக்கு அருகில் உள்ள பாடகம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பரிசோதனை செய்ய வந்துள்ளார். தொடர்ந்து பரிசோதனைக்கு வந்துகொண்டிருந்த அந்தப் பெண், திடீரென வருவதை நிறுத்திக்கொண்டார். அதனால், ‘அந்தப் பெண் கருக்கலைப்பு செய்திருப்பாரோ’ என்று சந்தேகம் அடைந்த ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்கள், மேல் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். அந்தத் தகவல் கலெக்டருக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனே என்னை அழைத்த கலெக்டர், அதுபற்றி விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

வெளியே பெட்டிக்கடை... உள்ளே கருக்கலைப்பு மையம்! - திருவண்ணாமலை திகில்!

சம்பந்தப்பட்ட பெண்ணிடம் நேரடியாக விசாரித்தால் உண்மை வராது என்பதால், அந்தப் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி அவரைக் கண்காணிக்க ஆரம்பித்தோம். மே 23-ம் தேதி அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதனால், அதற்கு முந்தைய நாள் அந்தப் பெண்ணின் செல்போன் பேச்சுகள் குறித்து ஆய்வுசெய்தோம். அப்போது அவர், கலா என்ற நர்ஸிடம் பேசியது, கருவில் இருந்த குழந்தையின் பாலினத்தைப் பரிசோதனை செய்தது ஆகியவை தெரிய வந்தன. அத்துடன் அந்தப் பெண் தன் உறவினர் குட்டி என்பவர் மூலமாகக் கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து குட்டியை விசாரித்தோம். குட்டி மூலமாகக் கிடைத்த தகவல் அடிப்படையில், அவர் சொன்ன ஒரு பெட்டிக் கடையைச் சோதனை செய்தோம். வெளியில் பெட்டிக் கடைபோல இருந்தாலும் உள் அறையில், படுக்கை உட்பட கருக்கலைப்புக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மருந்து, மாத்திரைகளும் இருந்தன. அதைத் தொடர்ந்து அந்த சட்ட விரோத மையத்தை நடத்திவந்த கவிதா - பிரபு தம்பதியைக் கைது செய்தோம்” என்றார்.

வெளியே பெட்டிக்கடை... உள்ளே கருக்கலைப்பு மையம்! - திருவண்ணாமலை திகில்!

மாவட்ட கலெக்டர் கந்தசாமியிடம் பேசினோம். “கவிதா - பிரபு தம்பதியர் கடந்த பத்து ஆண்டுகளாகச் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்து வந்துள்ளனர். திருமணமான பெண்கள், கல்லூரி மாணவிகள் என்று கிட்டத்தட்ட நான்காயிரம் பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரபு, மெடிக்கல் ஷாப் வைத்திருப்பதால், அவர்களுக்கு மருந்து களும் எளிதாகக் கிடைத்துள்ளன. தற்போது, மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகளைப் பரிசோதனை செய்யும்படி சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு உத்தரவிட் டுள்ளேன்” என்றார்.

போலி கருக்கலைப்பு மையங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது மட்டும் போதாது. போலி மருத்துவர்களிடம் கருக்கலைப்பு செய்வதால் ஏற்படும் பிரச்னைகள், பெண் குழந்தைகளின் அவசியம் போன்றவை குறித்து பள்ளிப் பருவத்திலேயே பெண் குழந்தைகளுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அரசின் தலையாய கடமை.

- கா.முரளி