Published:Updated:

காரில் வந்து டோல்கேட்டில் கொள்ளையடித்த குரங்கு !- உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

News

த்தரப்பிரதேசத்தில் காரில் வந்து டோல்கேட்டில் 5,000 ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு குரங்கு ஒன்று தப்பிச் சென்றுவிட்டது. நாட்டில் பல விசித்திர சம்பவங்கள் நடைபெறும் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் இந்தச் சம்பவமும் நடந்துள்ளது. 

காரில் வந்து டோல்கேட்டில் கொள்ளையடித்த குரங்கு !- உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி

கான்பூர் அருகே பாரா டோல்கேட்டில் கார் ஒன்று வந்தது. அப்போது, காருக்குள் இருந்து குரங்கு ஒன்று டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கும் மையத்துக்குள் புகுந்தது. முதலில் கட்டணம் வசூலிப்பவரைச் சோதனையிடுவது போலச் சோதனையிட்டது. பின்னர், அருகே கட்டாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த பணத்தில் ஒரு கட்டைத் தூக்கிக்கொண்டு ஓடியது.

டோல்கேட்டில் இருந்தவரும் காரில் இருந்தவரும் குரங்கைப் பிடிக்க முயன்றனர். அதற்குள் குரங்கு தப்பிவிட்டது. இந்தக் காட்சிகள் டோல்கேட்டில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. காருக்கு மறுபுறம் இருந்த குரங்கு கார் நின்றதும் உள்ளே புகுந்து ஜன்னல் வழியாக உள்ளே நுழைவதைப் பார்க்க முடிந்தது. தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

குரங்கை காரின் உரிமையாளர் அழைத்து வந்து கொள்ளையடிக்க வைத்தாரா... இல்லையென்றால் குரங்கு காருக்குள் புகுந்து ஜன்னல் வழியாக டோல்கேட் மையத்துக்குள் புகுந்ததா என்கிற சந்தேகமும் இருக்கிறது. பணத்தை எடுத்த குரங்கு மீண்டும் காருக்குள் செல்ல முயன்றது. காரில் இருந்தவர் பணத்தைப் பறிக்க முயல அவரிடத்திலிருந்து தப்பி வெளியே ஓடிவிட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் கொள்ளைக்கார குரங்கை வலை வீசித் தேடி வருகின்றனர்.