Published:Updated:

காதலனைத் தொடர்ந்து காதலியும் மரணம் - மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலைக்கு இரண்டாவது பலி

காதலனைத் தொடர்ந்து காதலியும் மரணம் - மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலைக்கு இரண்டாவது பலி
News

மேட்டுப்பாளையம் அருகே ஆணவத்தாக்குதலுக்கு ஆளான பெண்ணும் உயிரிழந்தார்.

காதலனைத் தொடர்ந்து காதலியும் மரணம் - மேட்டுப்பாளையம் ஆணவப் படுகொலைக்கு இரண்டாவது பலி

கோவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். மார்கெட்டில் சுமை தூக்கும் பணி செய்துவந்த கனகராஜும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். ஆனால், கனகராஜ் காதலித்து வந்த பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் காதலுக்கு கனகராஜ் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, கனகராஜின் சகோதரர் வினோத், இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளார்.

இதனிடையே, திருமணம் செய்துகொள்வதற்காக கனகராஜ் மற்றும் அந்தப் பெண் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி, அவர்கள்  தங்கியிருந்த இடத்துக்கு வினோத் மதுபோதையில் சென்றுள்ளார். `அந்த சாதிப் பொண்ணை நீ திருமணம் செய்யக் கூடாது' என்று சொல்லி, கனகராஜிடம் வினோத் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வாக்குவாதம் முற்றி, வினோத் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கனகராஜ் மற்றும் அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில், கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, அந்தப் பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் பிழைப்பதற்கு 10 சதவிகிதம்தான் வாய்ப்பு உள்ளது என்று கூறி, அவருக்கு செயற்கை சுவாசம் மூலமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், கடுமையான காயங்களால் அந்தப் பெண்ணின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேதப் பரிசோதனை கிடங்கில் உள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வினோத், ஏற்கெனவே சரண் அடைந்த நிலையில், `அவருக்கு உறுதுணையாக இருந்த கந்தவேலு, ஐயப்பன், சின்னராசு ஆகியோரையும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' என்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை உடலை வாங்கமாட்டோம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.