
நெல்லை: அறக்கட்டளை விடுதியில் தங்கி படித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் பயிற்சி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியில் மலர்ச்சி என்ற அறக்கட்டளை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர், மாணவியருக்கான விடுதி அமைந்துள்ளது. இங்கே மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக விடுதிகள் இருந்தாலும் அவர்கள் உணவு சாப்பிட ஒரே இடத்தில் கூடுவது வழக்கம்.
இந்நிலையில், அங்கே தங்கி படிக்கும் செங்கோட்டை அருகே உள்ள பிரானூரை சேர்ந்த கோமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 6ஆம் வகுப்பு சிறுமியை, நேற்று இரவு ஆசிரியர் பயிற்சி படிக்கும் மாணவரான 17 வயது முத்துராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை அந்த மாணவி விடுதி நிர்வாகிக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இது சம்மந்தமாக போலீசார் விசாரணை நடத்தி முத்துராஜை கைது செய்ததுடன் அந்த மாணவியை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
##~~## |
ஆண்டனிராஜ்