ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

சோனியா காந்தி (ஒரு வாழ்க்கை வரலாறு)

ஜூ.வி. நூலகம்

ரஷீத் கித்வாய் (தமிழில்: எ. பொன்னுசாமி) பூம்புகார் பதிப்பகம், புதிய எண் 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108. விலை

சோனியா காந்தி (ஒரு வாழ்க்கை வரலாறு)

185

##~##

காங்கிரஸில், ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்த சோனியாவின் புராணம் பாடும் புத்தகம்!

ராஜீவ், திருமணம் செய்து அழைத்து வரும்போது மிரண்ட விழியுடன் வந்த சோனியா... இந்திராவின் மருமகளாக பொதுஇடங்களில் தென்படும்போது தயங்கித் தயங்கி கால்களை எடுத்து வைத்த சோனியா.... ராஜீவ் மறைவுக்குப் பிறகு தலையில் முக்காடும் முகத்தில் அப்பிய சோகமுமாக உட்கார்ந்து இருந்த சோனியா... என்ன மாதிரியான 'பாலிடிக்ஸ்’ செய்து இப்போது இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் என்ற 40 ஆண்டுகளின் நகர்வுகள் இது.

இத்தாலியின் வடபகுதியான அர்பாஸானோவில் பிறந்து, அவர்கள் எவரும் உடன் இல்லாமல் டெல்லிக்கு வாழ வந்தார் சோனியா.  இப்போது, இந்திரா குடும்பத்தினர் எவரும் இல்லாமலும் வாழ்ந்து வருகிறார். அவரது சொக்கட்டான் ஆட்டத்தில் குடும்ப ரீதியாகப் பார்த்தால் இந்திராவின் மூத்த

சோனியா காந்தி (ஒரு வாழ்க்கை வரலாறு)

மருமகள் மேனகாவும், அரசியல் ரீதியாகப் பார்த்தால் இந்திராவின் மூத்த சகாவான நரசிம்மராவும் கவிழ்க்கப்பட்டதுதான் சோனியாவைத் தலைவியாக ஆக்கிய நிகழ்வுகள். இந்திரா குடும்பத்தில் அரசியலுக்கு அடுத்து வர இருந்தவர் சஞ்சய். அவர் இறந்த பிறகு அதிக ஆர்வம் மேனகாவுக்குத்தான் இருந்தது. ஆனால், அவரைப் பெரிய குடும்பத்தில் இருந்து பிரிப்பதில் சோனியா கையாண்ட வழிமுறைகள் இன்றைய டி.வி. சீரியலுக்கு இணையானவை. ''மேனகா அரசியலுக்கு வருவதை சோனியா தடுத்து விட்டாலும் ராஜீவ் வருவதையும் சோனியா விரும்பவில்லை'' என்கிறார் கித்வாய்.

இந்திரா மரணத்தைத் தொடர்ந்து திடீர் பிரதமராக ராஜீவ் அறிவிக்கப்படும் சில நிமிடங்களுக்கு முன்பு வரை, 'அரசியல் வேண்டாம்’ என்று தடுத்தவர் சோனியா. அதை அவரே எழுதியும் இருக்கிறார். ஆனால், 1989-ம் ஆண்டு தோல்விக்குப் பிறகு 'இத்தாலிக்கு வாழப் போய்விடலாம்’ என்று ராஜீவ் முடிவுக்கு வந்தபோது, சோனியா அதைத் தடுக்கும் அளவுக்கு அரசியல்வாதியாக மாறி இருந்தார்.

அந்தத் தேர்தல் தோல்விக்குக் காரணமான போஃபர்ஸ் விவகாரத்தின் சூத்ரதாரியான குவாத்ரோச்சி, ராஜீவ் இல்லத்தின் ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களில் மிகமிக முக்கியமானவராக இருந்தார் என்பதையும் கித்வாய் சொல்கிறார். போஃபர்ஸ் பூதத்துக்குப் பிறகுதான் இந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றுகூடல் நிறுத்தப்பட்டதாம்.

'பிரதமர்’ நரசிம்மராவும் 'காங்கிரஸ் தலைவர்’ சீதாராம் கேசரியும் விழிபிதுங்கி வெளியேற்றப்பட்ட கதை... அனைவருமே அறிந்து கொள்ள வேண்டியது. அந்த ஆக்ஷன் பிளானின் மையமாக சோனியாவின் செயலாளர் வின்சென்ட் ஜார்ஜ் இருந்துள்ளார். ராவுக்குப் பிடிக்காதவர்கள் அனைவரையும் சோனியாவை மரியாதை நிமித்தமாக சந்திக்க வைத்து, பின்னர், அவரையே மரியாதைக்குரியவராக மாற்றி இருக்கிறார் வின்சென்ட் ஜார்ஜ். அதேபோல், சீதாராம் கேசரிக்கு லவன் - குசன் மாதிரி இருந்த அகமது படேலையும் குலாம்நபி ஆசாத்தையும் அவரிடம் இருந்தே பிரித்து, 'நீங்கள் ராஜினாமா செய்து விடுங்கள்’ என்று அவர்கள் மூலமாகவே கேசரியிடம் சொல்ல​வைத்ததும் சோனியா - ஜார்ஜ் கூட்டணியின் திறமை. இவர்களோடு இன்று அகமது படேலும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா?

''அரசியல் என்பது பல முடிச்சுகளைக்கொண்ட, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத ஒன்று. இதை உறுதிசெய்து கொள்ள, ஒருவர் சோனியாவின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தாலே போதும்’ என்கிறார் கித்வாய்.

சோனியாவைப் புரிந்து கொண்டால் எவரையும் புரிந்து கொள்ளலாம் என்பதையே புத்தகத்தை முடிக்கும்போது உணர முடிகிறது!

- புத்தகன்