உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

ஐ.ஏ.எஸ். அம்புட்டுத்தானா?

அதிர்ச்சியில் தமிழக மாணவர்கள்

##~##

லெக்டர் கனவோடு வலம்வரும் தமிழ்நாட்டு மாணவர்கள், கடந்த மே 20-ம் தேதி நடை​பெற்ற முதல் நிலைத் தேர்வுக்குப் பிறகு கொதித்துக்​கிடக்கிறார்கள். தேர்வு முறையை யு.பி.எஸ்.சி (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) மாற்றி அமைத்ததுதான் இந்தக் குமுறலுக்குக் காரணம். 

இந்தத் தேர்வில் பங்கு பெற்ற பரமேஸ்வரன் என்ற மாணவர், ''1979 முதல் கடைப்பிடித்து வரும் சிவில்

ஐ.ஏ.எஸ். அம்புட்டுத்தானா?

சர்வீஸ் தேர்வு முறையில், 2010-ல் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் 'சிசாட்’ (civil service aptitude test)  எனப்படும் இரண்டாம் தாள் தேர்வில் கடுமையான ஆங்கிலத்தில் கேள்விகள் இருந்தன. இரண்டு முறை இன்டர்வியூ வரை சென்ற நான், இந்தத் தேர்வு முறை மாற்றத்தால் முதல் நிலைத் தேர்வில்கூட தேர்ச்சி பெறவில்லை'' என்கிறார் குமுறலாக.

''2010-ல் தமிழ்நாட்டில் அகில இந்திய அளவில் 122 பேர் சிவில் சர்வீஸ் துறையில் தேர்வு ஆனார்கள். தேர்வு முறையில் மாற்றம்வந்த பிறகு, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 96 பேரும் இந்த ஆண்டு 68 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளார்கள். சமீபத்தில் நடந்த தேர்வுத்தாளைப் பார்த்தால், அடுத்த ஆண்டு தமிழக மாணவர்கள் 50 பேர் தேர்ச்சி பெறுவதே கடினமாக இருக்கும். இந்த வீழ்ச்சிக்குக் காரணம் யு.பி.எஸ்.சி. நடைமுறைப்படுத்தி உள்ள தேர்வுத்தாள்தான்.

கடந்த ஆண்டு 'பேசேஜ் ரீடிங்- காம்ப்ரி​கென்ஷன்’ எனப்படும் வகையில் 35 கேள்விகள் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டு இருந்தன. அதாவது, பெரிய ஆங்கிலப் பத்திகளைப் படித்துப் புரிந்துகொண்டு கீழே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடை கொடுக்க வேண்டும். அது, கடுமையான ஆங்கிலத்தில் இருப்பதால் நம் மாணவர்களுக்கு, அதைப் படித்துப் புரிந்துகொள்ளவே நேரம் பிடிக்கும். இதில் ஏமாற்று வேலை என்னவென்றால், இந்தியில் பதில் எழுதுபவர்கள், இந்திப் பத்தியைப் படித்தால் போதும் என்பதுதான். அதனால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எளிதில் நம்மவர்​களைப் பின்னுக்குத் தள்ளிவிட முடிகிறது.

ஐ.ஏ.எஸ். அம்புட்டுத்தானா?

தமிழகத் தலைவர்கள் இந்த ஓரவஞ்சனையான தேர்வு முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார், சென்னையில் ஷங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி என்ற பயிற்சி மையத்தை நடத்தி வரும் ஷங்கர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து ரிட் மனு தாக்கல் செய்து இருக்கும் மூர்த்தி என்ற மாணவர், ''ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் குறைந்தபட்சத் தேர்ச்சி பெற்றிருந்தால்கூட இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளை எழுத முடியும் என்பது இந்தத் தேர்வின் சிறப்பு. கடந்த காலத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ. பயின்ற மாணவர்கள்கூட கடின உழைப்பால் ஐ.ஏ.எஸ். ஆக முடிந்தது.

பழைய தேர்வு முறையில் பிரிலிமினரி எனப்படும் முதல் நிலைத் தேர்வில் இரண்டு பகுதிகள் இருந்தன. அதில் கொள்குறி முறையில் (அப்ஜெக்டிவ் டைப்) வினாக்கள் கேட்கப்படும். முதல் தாள், பொது அறிவு குறித்த பிரிவாக 150 மதிப்பெண்களுக்கும், இரண்டாவது தாள் விருப்பப் பாடமாக 300 மதிப்பெண்களுக்கும் இருக்கும். இந்த இரண்டு தேர்வு​களுக்கும் தேர்வு நேரம் 2 மணி நேரம். இந்தத் தேர்வுகளில் தவறான பதில் எழுதி​னால், நெகட்டிவ் மதிப்​பெண் வழங்கப்​பட்டு

ஐ.ஏ.எஸ். அம்புட்டுத்தானா?

வந்தது. புதிதாகஅறிமுகப்​படுத்தப்​பட்ட தேர்வு​ முறை​யிலும் பிரிலிமினரி தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்​பெண்கள். அதன்படி முதல்தாள் பொது அறிவுத் தாளில் ஏற்கெனவே இருந்த பல பாடங்கள் இப்போதும் இடம் பெற்றுள்ளன.

இரண்டாம் தாளில்தான் பிரச்னை. விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்து எழுதும் முறை நீக்கப்பட்டு உள்ளது. அதற்குப் பதிலாக இடம் பெற்று இருக்கும் பல்வேறு கேள்வி முறைகள், பதற்றம்​கொள்ள வைக்கின்றன. கணிதத்துக்கும் ஆங்கிலப் புலமைக்கும் ஏதுவாகத்தான் இந்தப் புதிய தேர்வு வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதுபோன்ற கேள்வி முறை, நம் தமிழக மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் கற்றுத்தரப்படுவது இல்லை. அதனால், தமிழர்களுக்கு இனி சிரமம்தான்'' என்றார்.

இதுகுறித்துப் பேசும் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், ''பல வருடங்களாகத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், முதல் நிலையிலேயே ஓரங்கட்டப்படுவது வேதனையானது. தேர்வுமுறை எல் லாருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். கணக்கு, ஆங்கிலத் திறன் மட்டுமேகொண்டு தேர்வு செய்யும் முறை நிச்சயம் மாற்றப்பட வேண்டும். அடுத்த ஆண்டிலாவது 8-வது அட்டவணையில் இருக்கும் வட்டார மொழிகளில் தேர்வுத்தாள் அமைய வேண்டும். மெயின் தேர்விலும் விருப்பப் பாடங்களை எடுத்துவிட யு.பி.எஸ்.சி. ஆலோசித்து வருகிறது. இது உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், தமிழர்களுக்கு ஐ.ஏ.எஸ். பணி என்பதே கனவாகி விடும்'' என்கிறார்.

தமிழகத் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசும் இதனைக் கவனிக்க வேண்டும்!

- ஆர்.சரண்