உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

போலி சான்றிதழ்... ரவுடிகள் மிரட்டல்!

இன்ஜினீயரிங் அட்மிஷன் உஷார்

##~##

து பொறியியல் கல்லூரிகளின் அட்மிஷன் நேரம். சரியான கல்லூரியைத் தேர்ந்து எடுப்பதில் மாணவர்களும் பெற்றோர்களும் உஷா ராக இருக்க வேண்டும் என்பதற்கு லால் பெர்லின் ஓர் உதாரணம்.

 கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் உள்ளது மரியா காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி. இந்தக் கல்லூரியால் பாதிக்கப்பட்ட மாண வர்களில் ஒருவரான லால் பெர்லின், ''மரியா காலேஜ் விளம்பரத்தைப் பார்த்து, 2010-ல் மெக் கானிக்கல் பிரிவில் சேர்ந்தேன். முதல் வருஷத்துக்கு மட்டுமே 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ஃபீஸ் வாங்கினாங்க. முதல் செமஸ்டர் எழுதிய பிறகு, அண்ணா பல்கலைக்கழக வெப்சைட்டில் என் நம்பரும் ரிசல்ட்டும் வரவில்லை. பதறிப்போய் காலேஜில் கேட்டபோது, 'ரிசல்ட் வருவதற்குத் தனியாக ஃபீஸ் கட்ட வேண்டும்’னு சொல்லி, அதுக்கும் பணம் கறந்துட்டாங்க.

போலி சான்றிதழ்... ரவுடிகள் மிரட்டல்!

ரெண்டாவது செமஸ்டரிலும் எனக்கு ரிசல்ட் வரலை. ஆனா, காலேஜ்ல எனக்கு மார்க் ஸ்டேட்மென்ட் கொடுத்தாங்க. எனக்கு சந்தேகம் வந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டப்பதான், என்னைச் சேர்த்தது பல்கலைக்கழகத்துக்கே தெரியாது என்ற உண்மை புரிந்தது. காலேஜ் நிர்வாகத்திடம் கேட்டபோது, 'அண்ணா பல்கலைக்கழகம் சர்ட்டிஃபிகேட் தரா விட்டால் என்ன? நாங்கள் கொடுக்கிறோம். கோர்ஸ் முடிச்சுட்டு எங்க காலேஜ்லயே வேலைக்கு வந்துடு’னு அலட்சியமாச் சொல் றாங்க. கட்டிய பணத்தையும், என் ஒரிஜினல் சர்ட்டிஃபிகேட்டையும் தரச் சொல்லிக் கெஞ்சியும் பலன் இல்லை'' என்று கண்ணீர் வழியச் சொன்னார்.

அவருடைய வழக்குரைஞர் ரெத்னகுமார், ''நீதி கேட்டு கல்லூரிக்குப் போன பெர்லினின் குடும்பத்தாரை

போலி சான்றிதழ்... ரவுடிகள் மிரட்டல்!

ரவுடிகளைக் கொண்டு மிரட்டி இருக்காங்க. முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட எஸ்.பி-னு பல இடங்களில் புகார் கொடுத்தும் இதுவரை பதில் இல்லை. அதனால், குழித்துறை நீதிமன்றத் தில் முறையீடு தாக்கல் செஞ்சேன். அதை அடுத்து காலேஜ் சேர்மன், துணை சேர்மன், முதல்வர், டைரக்டர் நான்கு பேர் மீதும் மோசடி, நம்பிக்கைத் துரோகம் ஆகிய பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரி அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கும் பல்கலைக்கழகத்துக்குக் கோரிக்கை மனு கொடுத்து இருக்கிறேன்'' என்றார்.

மரியா பொறியியல் கல்லூரியின் முதல்வர் சுஜாரிடம் கேட்டபோது, ''இது ஒரு தவறான குற்றச்சாட்டு'' என்றார். ''தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியதில், பெர்லினின் சேர்க்கை முறையில்லை என்று பல்கலைக்கழகமே சொல்கிறதே?'' என்று மீண்டும் கேட்டதற்கு, ''நான் ஒரு மீட்டிங்கில் பிஸியாக இருக்கிறேன். நானே உங்களைக் கூப்பிடுறேன்'' என்று, போன் இணைப்பைக் கட் செய்து விட்டார். அதன்பிறகு, அவர் அழைக்கவே இல்லை. நமது அழைப்பையும் ஏற்கவில்லை.

மாணவர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது!

- என்.சுவாமிநாதன்

படங்கள்: ரா.ராம்குமார்