உங்கள் எம்.எல்.ஏ. எப்பூடி?
Published:Updated:

பைலட் ஏமாற்றம்... திருடனாய் மாற்றியது!

மதுரவாயல் கொள்ளையில் இருண்ட பக்கங்கள்!

##~##

ரு திருடனின் மறு பக்கம் இது! 

மதுரவாயல் நகைக்கடைக்குள் புகுந்து அதன் உரிமையாளர் கணேஷ் ராமை, கொலை செய்து கொள்ளை அடித்த சம்பவம், சமீபத்தில் சென்னை வட்டாரத்தில் பலத்த பயத்தை ஏற்படுத்தியது. கொலையாளி, கடையை நோட்டம் விடும் வீடியோ காட்சிகள் வெளியாகி  பதற்​றத்தை இன்னும் அதிகப்படுத்தியது. பெரிய தேடுதல் வேட்டைக்குப் பிறகு, ராமஜெயம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். ராமஜெயத்தின் ஃப்ளாஷ்பேக் ஆச்சர்யமும் அதிர்ச்சி கலந்தது!

ஐந்து நாட்கள் போலீஸ் விசார​ணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டு உள்ளார் ராமஜெயம். கடந்த மாதம் 20-ம் தேதி, மதுரவாயல் காவல் நிலையத்தில் இருந்த ராமஜெயத்தைப் பார்க்க, சிதம்பரத்தில் இருந்து, அவரது தந்தை கொளஞ்சியப்பன் வந்திருந்தார். அதுவரை போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு அமைதியாகப் பதில் சொல்லிவந்த ராமஜெயம், தந்தையைப் பார்த்ததும் திடீரெனப் பித்துப் பிடித்தவர் போன்று கத்திக் கூச்சலிட்டார். அதனால் காக்கிகள், கொளஞ்சியப்பனை அவசரஅவசர​மாக வெளியேற்றினர். கலங்கிய கண்களுடன் காவல் நிலையத்துக்கு வெளியே தவிப்புடன் நின்ற கொளஞ்சியப்பனிடம் பேசினோம்.

பைலட் ஏமாற்றம்... திருடனாய் மாற்றியது!

''சிதம்பரம் பக்கத்துல இருக்குற பரங்கிப்பேட்டைதான் எங்க சொந்த ஊர். அரிசி மண்டி வைத்து இருக்கிறேன். எனக்கு மொத்தம் மூணு பசங்க, ஒரு பொண்ணு. மூணாவது பையன்​தான் ராமஜெயம்.

பைலட் ஏமாற்றம்... திருடனாய் மாற்றியது!

நல்லாப் படிப்பான். மத்த பசங்க அரிசி வியாபாரத்துக்கு வந்துட் டாங்க. ராமஜெயம் மட்டும் டிகிரி வரை படிச்சான். 'அப்பா எனக்கு அரிசி மண்டியில வேலை பார்க்க விருப்பம் இல்லை. நான் பைலட் ஆகி கை நிறைய சம்பாதிக்கணும்’னு அடிக்கடி சொல்வான். எனக்கும் நம்ம குடும்பத்துல இருந்து ஒரு பையன் பெரிய வேலைக்குப் போனா கௌரவமா இருக்குமேனு தோணுச்சு. உன் விருப்பம் போல படின்னு சொல்லிட்டேன். இரண்டு வருஷங்களுக்கு முன்னாடி, கிண்டியில இருக்குற ஃபால்கான் ஃப்ளைட் இன்ஸ்ட்டிடியூட் போய்

பைலட் ஏமாற்றம்... திருடனாய் மாற்றியது!

விசாரிச்சான். அங்கே நிர்வாகியா இருந்த சிவசிவராஜா என்பவர், 'மூணே மாசத்துல அமெரிக்காவுல பைலட் படிப்புக்குச் சேர்த்துவிடுறேன். 11 லட்ச ரூபாய் செலவாகும்’னு சொல்லி இருக்கார். என்கிட்ட வந்து சொன்னான். எங்க வீட்டை அடகுவெச்சு மொத்தப் பணத்தையும் கொடுத்தேன். என் பையனோட மொத்தம் 20 பேர் பணம் கட்டுனாங்க. ஆனா, அந்த ஆளு சொன்னபடி அமெரிக்கா அனுப்பாம இழுத்தடிக்க ஆரம்பிச்சார்.  பணத்தைத் திரும்பக் கேட்டு எல்லோரும் நெருக்கியதும், 'இப்போதைக்கு ஸ்ரீலங்கா போய் டிரெயினிங் எடுங்க. திரும்பி வந்ததும் அமெரிக்கா அனுப்புறேன்’னு சொன்னார். என் பையனும் அவர் சொன்னதை நம்பி, ஸ்ரீலங்கா போய் நாலு மாசம் டிரெயினிங் எடுத்துக்கிட்டான். அதுக்குத் தனியா ஆறு லட்ச ரூபாய் செலவாச்சு. திரும்பி வந்தும் அமெரிக்கா போறது லேட் ஆகிட்டே இருந்தது. ஸ்ரீலங்காவுல இருக்கும்போது அவனுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் ஜெய் அறிமுகம் ஆகி இருக்கார். சிங்கப்பூர்ல ஏதாவது வேலை இருந்தாச் சொல்லுங்கன்னு கேட்டிருக்கான். 'இந்தியாவுல 10 லட்ச ரூபாய்க்கு மருந்து வாங்கி சிங்கப்பூர் மருத்துவமனையில வித்தா, 20 லட்சம் கிடைக்கும்’னு சொல்லி இருக்கார். என்கிட்ட வந்து பணம் கேட்டான். நான், 'பைலட்டுக்குப் படிக்கிற வேலையை மட்டும் பாரு. இதெல்லாம் வேணாம்’னு சொல்லிட்டேன். ஆனா எங்க சொந்தக்காரங்க சில பேருகிட்ட வட்டிக்கு வாங்கி அந்த டாக்டர்கிட்ட பணம் கொடுத்து இருக்கான். அதோட அந்த ஆளு எஸ்கேப். சொந்தக்காரங்க பணத்தைக் கேட்டு நெருக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பிறகு என்ன நடந்துச்சுன்னே தெரியலை. இப்ப என் பையனைக் கொலைகாரன்னு போலீஸ் கைது பண்ணி இருக்கு. என் பையன் இப்படி செய்வான்னு என்னால நம்பவே முடியலை. எந்தக் கெட்ட பழக்கமும் அவனுக்கு கிடையாது. சிட்டி வாழ்க்கை அவனை இப்படி மாத்தும்னு தெரிஞ்சிருந்தா என்னோடவே அரிசி மண்டியிலயே போட்டிருப்பேன். எங்க குடும்பத்துல எல்லாருமே அவன் மேல பாசமா இருந்தோம். அவன் கைதானதுல இருந்து என் பொண்டாட்டி படுத்த படுக்கையா இருக்கா. ஊருக்குள்ள வந்து யாருகிட்ட வேணும்னாலும் கேட்டுப் பாருங்க. எங்க குடும்பத்துப் பையன் இப்படி செஞ்சான்னு நம்ப மாட்டாங்க'' என்று தழுதழுத்தார்.

பைலட் ஏமாற்றம்... திருடனாய் மாற்றியது!

ராமஜெயத்தின் வழக்கறிஞரான அப்ரார் அகமத், ''போலீஸ் கஸ்டடிக்கு ராம​ஜெயத்தை அனுப்பினால், என் கவுன்டர் செய்து விடுவார்கள் என்று ராமஜெயத்தின் தந்தை பயந்தார். எனவே, நீதிமன்றத்தில் இதைக் கூறி கடுமையான நிபந்தனைகளுடன் போலீஸ் கஸ்டடிக்கு அனுப்பினோம். ராமஜெயத்தைக் கைது செய்த போலீஸார், ஒரு தனியார் பொழுதுபோக்கு பீச்சில் மூன்று நாட்கள் அடைத்து வைத்துச் சித்ரவதை செய்ததாக அவரது தந்தை என்னிடம் கூறினார். அதன்பிறகே, மதுரவாயல் கொலை குறித்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி உள்ளனர். எனவே, அந்தக் கொலை வழக்கை முடிக்க வேண்டிய அவசரத்தில் ராமஜெயத்தைக் கைது செய்து உள்ளனர். போலீஸ் அடித்ததில் ராமஜெயத்தின் வலது கை உடைந்து உள்ளது. இப்போது, ராமஜெயத்தின் சகோதரர் நிர்மலைப் பார்த்த போலீஸார், உன் உருவமும் அந்த வீடியோவுல இருக்குது என்று கூறினார்களாம். காவல் துறையின் இதுபோன்ற தடுமாற்றங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து, விரைவில் ராம ஜெயத்தை விடுவிப்போம்'' என்றார்.

ஆனால், இதுகுறித்துப் பேசிய போலீஸ்காரர்களோ, ''ராமஜெயமே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். மேலும், அவரிடம் இருந்து நகைகளையும் கைப்பற்றி இருக்கிறோம். இதைவிட வேறு என்ன ஆதாரங்கள் வேண்டும்'' என்று கேட்கிறார்கள்.

- தி.கோபிவிஜய்

படங்கள்: முத்துக்குமார்