Published:Updated:

`மருத்துவக் குறிப்புகளை பின்பற்றியதால் பாதிப்பு’ - சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள்

சித்த மருத்துவர் ஷர்மிகா சரண்
News
சித்த மருத்துவர் ஷர்மிகா சரண்

சித்த மருத்துவ தொழில் விதிமுறைகளுக்கு முரணாக சமூக வலைதளங்களில் கருத்துகளைத் தெரிவித்ததாகப் பலர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜனவரி 24-ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ மன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.

சித்த மருத்துவர் ஷர்மிகா ஆரோக்கியம் தொடர்பான தன்னுடைய கருத்துகள் மூலம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றார். அதே நேரம், அவர் தெரிவித்த சில முரணான கருத்துகள் அவருக்குக் கண்டனங்களையும் பெற்றுத் தந்தன. `கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்', `தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும்', `ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரே நாளில் மூணு கிலோ எடை கூடும்' என இப்படி அவர் தெரிவித்த பல கருத்துகள் கேலிக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகின.

சித்த மருத்துவர் ஷர்மிகா சரண்
சித்த மருத்துவர் ஷர்மிகா சரண்

மேலும், `நம்மைவிடப் பெரிய மிருகத்தை சாப்பிட்டா நம்மளால டைஜஸ்ட் (செரிமானம்) பண்ண முடியாது. அதனால பீஃப் சாப்பிடக்கூடாது', ‘நொங்கு சாப்பிட்டா மார்பகம் பெரிதாகும்’ என உண்மைக்கு புறம்பான பல தகவல்களைப் பரப்பியதன் விளைவாக அவரை விசாரிக்க அழைப்பு விடுத்திருந்தது, சித்த மருத்துவ கவுன்சில்.

சித்த மருத்துவ தொழில் விதிமுறைகளுக்கு முரணாக சமூக வலைதளங்களில் கருத்துகளைத் தெரிவித்ததாகப் பல தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜனவரி 24-ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ மன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. 

தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் விசாரணைக்குழு முன்பு ஷர்மிகா
தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் விசாரணைக்குழு முன்பு ஷர்மிகா

அதோடு பிப்ரவரி 10-ம் தேதி எழுத்துபூர்வமான விளக்கத்தையும் அவரிடம் விசாரணைக் குழு கேட்டிருந்தது. இந்த விளக்கத்திற்குப் பிறகு வல்லுநர் குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

ஏற்கெனவே ஷர்மிகாவிடம் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் இரண்டு புகார்கள் இவர் மீது இப்போது பதிவாகி உள்ளன. இவரது மருத்துவக் குறிப்பு வீடியோக்களை பார்த்து, அவர் சொன்ன மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்றியதால் பாதிக்கப்பட்டதாக 2 புகார்கள் இந்திய மருத்துவ ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மீதான நடவடிக்கை இனிதான் தெரிய வரும்.