Published:Updated:

ரூ.4 லட்சம் மதிப்பிலான கள்ளச்சாரயம் பறிமுதல்! - சீர்காழி அ.தி.மு.க மகளிரணி பிரமுகர் கைது

சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது

illicit liquor
illicit liquor

சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆளும்கட்சி ஒன்றிய மகளிரணித் தலைவி அஞ்சம்மாள் கைது செய்யப்பட்டிருப்பது நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Anjammal
Anjammal
Vikatan

நாகை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள எடக்குடி வடபாதி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி அஞ்சம்மாள். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியான இவர், தற்போது வைத்தீஸ்வரன்கோயில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவராகவும், அ.தி.மு.க. ஒன்றிய மகளிரணித் தலைவராகவும் உள்ளார்.

Vikatan

இந்த நிலையில், மத்திய புலனாய்வு போலீஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நேற்று அஞ்சம்மாள் வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர். அவருடைய வீட்டின் பின்புறமுள்ள மாட்டுக்கொட்டகையில் வைக்கோல் போட்டு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 47 கேன்களில் இருந்த கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.4 லட்சமாகும்.

illicit liquor
illicit liquor

இதுபற்றி சீர்காழி மதுவிலக்கு போலீஸாரிடம் கேட்டபோது, ``ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சாராய வியாபாரி மூலம் தீபாவளி விற்பனைக்காக புதுச்சேரியிலிருந்து சாராயத்தைக் கடத்திவந்து அஞ்சம்மாள் வீட்டில் பதுக்கிவைத்துள்ளார்கள். இவ்வழக்கில் அஞ்சம்மாளைக் கைது செய்துள்ளோம். இதில் தொடர்புடைய மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றனர்.