'நான் தடம்புரளவில்லை!’

ம.நடராசன், தஞ்சையில் நடத்திய தமிழர் கலை இலக்கியத் திருவிழா பற்றி கடந்த 23.1.13 இதழில் நாம் எழுதி இருந்தோம். இதுதொடர்பாக ம.நடராசன் நமக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், ''என்மீது பொய்வழக்குப் போட்டதால் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை. என்மீது வழக்குப் போட்டவர்களை உரிய நேரத்தில் சொல்வேன் என்றுதான் கூறினேனே தவிர, கண்டுபிடித்துச் சொல்வேன் என்று நான் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதற்கு மேல் கருத்து சொல்லக் கூடாது என்பதற்காக நான் உரிய நேரத்தில் சொல்கிறேன் என்றேன். மற்றபடி நீங்கள் சொல்லி இருப்பது போல நான் தடம் புரளவில்லை!'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.