ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

பொலிவிய நாட்குறிப்பு

சே கெவாரா, தமிழில் அமரந்த்தா

##~##

'எங்களது ஒவ்வொரு செயல்பாடும் ஏகாதி​பத்தியத்துக்கு எதிரான போராட்டத்தின் அறைகூவல்தான். இதை வரவேற்கும் ஏதோ ஒரு காதில் இந்த அறைகூவல்  விழுமானால், எங்கள் ஆயுதங்களை ஏந்துவதற்கு மற்றொரு கை நீளுமானால், மரணம் எம்மை எங்கெங்கு எதிர் கொள்வதானாலும் அதற்கு நல்வரவு’_ என்று தனது நாட்குறிப்பில் சே கெவாரா எழுதும் போது, பொலிவியக் காடுகளுக்குள் உயிரைப் பணயம் வைத்துச் சென்றுகொண்டு இருந்தார். அர்ஜென் டினாவில் பிறந்து... கவுதமாலா வந்து ஆட்சிக் கவிழ்ப்பு ஆயுதப் புரட்சியில் இறங்கி அது தோற்ற பிறகு, மெக்ஸிகோ வந்து பிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்து அவரோடு இணைந்து கியூபா ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய காலகட்டத்து சே அல்ல அவர். கியூபா புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, அந்த அரசின் அதிகாரம் மிக்க தொழில்துறை இயக்குநர் பதவியும் கியூபா தேசிய வங்கித் தலை

பொலிவிய நாட்குறிப்பு

வர் பதவியும் கிடைத்தது. பின்னர், தொழில் அமைச்சராகவும் ஆனார். இந்த வாழ்க்கை பிடிக்காமல் காங்கோ போரை வழிநடத்த சே சென் றார். அது தோல்வியுற்றபோது பிரேக் நாட்டில் தலைமறைவாக இருந்தார். பின்னர், பொலிவியா போரை வழிநடத்தினார்.

சுற்றிலும் ஏகாதிபத்தியக் காற்று வீசியபோது கியூபாவில் மட்டும் சோசலிசம் வெல்லாது என்பதால்தான் அனைத்து நாடுகளிலும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க சே முயற் சித்தார். பொலிவியப் போரில் அவர் எதிரியின் கையில் சிக்கி கொலை செய்யப்படும் வரையிலான நாட்குறிப்புதான் இது. 1966-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி முதல் 1967-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி வரை சே எழுதியவை. இவற்றில் 15 பக்கங்கள் சமீபத்தில்தான் கிடைத்தன. அதுவும் முதன் முறையாக மொழிபெயர்த்துச் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆட்சி அதிகாரத்தின் சுவை அறிந்தபிறகும் காட்டு வாழ்க்கைக்குத் தயாராக சே இருந்ததுதான் அந்தப் போராளிக்கான பெரும் பெருமை. 'சே ஒரு போதும் பதவி அதிகாரம், கௌரவம் ஆகியவற்றில் தனிப்பட்ட விருப்பம் கொண்ட மனிதரல்ல’ என்று பிடல் காஸ்ட்ரோ சொல்வது அதனால்தான்!

கியூபாவில் இருந்து வெளியேறிய சே, தன்னுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தோழர்களையும் சேர்த்துக் கொண்டு நாகாஹுவசு ஆற்றின் கரை யில் தனது கெரில்லாப் படையை மீண்டும் தொடங்குகிறார். அதில் தொடங்குகிறது இந்த டைரி. 'ஓடைக்கு அருகில் இருந்த மரங்கள் அடர்ந்த பகுதியில் பகல் பொழுதைக் கழித்தோம். வீட்டிலிருந்து அது நூறுமீட்டர் தொலைவுதான் இருக்கும். ஒரு வகை மர வாத்துகள் எங்களைத் தாக்கின. அவை கொத்துவது இல்லை. ஆனால் அதிக தொந்தரவு செய்கின்றன. இதுவரை ஆடு, மாடுகளில் உள்ள உண்ணிகள், மர வாத்துகள், சிறு கொசுக்கள், மரிகி பூச்சி ஆகியவற்றைக் கண்டோம். அர்கனராஸின் உதவியுடன் ஜீப்பை நிறுத்தி விட்டு வந்த பிகோட்டஸ், அவரிடமிருந்து சில பன்றிகளும், கோழிகளும் வாங்கப் போவதாக வாக்களித்தான்....’ இப்படித் தினந்தோறும் தன்னைக் கடித்த உண்ணிகளைப் பற்றியும், தான் சாப்பிட்ட குதிரை, பன்றிக் கறிகள் பற்றியும் எழுதிச் செல்லும் சே, கெரில்லாப் போராட்டம் பற்றிய தெளிவான வரையறைகளையும் ஆங்காங்கே விதைத்துச் செல் கிறார்.

போராளியாக இருந்த ஒரு சமூக மருத்துவனின் உண்மையான முகத்தை தரிசிக்கும் வாய்ப்பை இந்த நாட்குறிப்புகள் நமக்குத் தருகின்றன.

- புத்தகன்