ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''நீதிமன்றத்துக்கு வந்தால் குடியா முழுகிவிடும்?''

அரசு அதிகாரிகள் மீது குவியும் அவமதிப்பு வழக்குகள்

##~##

னிதனின் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்​தையும் பாதுகாக்கும் அரணாக நீதிமன்றங்களைத்தான் மக்கள் நம்பி இருக்கிறர்கள். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகளே அலட்சியம் செய்வதால் நீதிமன்றத்துக்கு அவர்களைக் கட்டாயப்படுத்தி அழைப்பதுதான் இப்போதைய ஹாட்! 

சென்னை போலீஸ் கமிஷனரை நீதிமன்றத்துக்கு அழைத்த பரபரப்பு அடங்குவதற்குள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த வழக்கின் விவரம் என்ன?

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழி லாளி பழனிசாமி ஊதிய உயர்வு கோரி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று, நீதிமன்றம் அப்போதே உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாததால் அப்போதைய நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் ஷீலா

''நீதிமன்றத்துக்கு வந்தால் குடியா முழுகிவிடும்?''

பாலகிருஷ்ணனுக்கு இரண்டு முறை மனு செய் தார். ஐந்து மாதம் ஆகியும் ஒன்றும் நடக்கவில்லை. பழனிசாமி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றக் கதவைத் தட்டினார். தமிழக அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்தார்.

அப்போது, நகராட்சி நிர்வாகத் துறையின் செயலாளராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் (இப்போது தலைமைச் செயலாளர்) ஆஜராகி பதில் மனுத் தாக்கல் செய்யும்படி நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். இந்த வழக்கு ஜனவரி 9-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அவர் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்குத் தள்ளிவைத்த நீதிபதி, அன்றும் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகவில்லை என்றால் பிடி வாரன்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தார்.

18-ம் தேதி, அட் வகேட் ஜெனரல் நவ நீதகிருஷ்ணன் ஆஜராகி, இப்போது தலைமைச் செயலாளராக இருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். அதில், ''இந்த வழக்கில் துடியலூர் பஞ்சாயத்துதான் காலதாமதம் செய்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டதும் ஜனவரி 7-ம் தேதியே மனுதாரர் பழனிசாமி உட்பட 14 பேரின் பணிக்கால பலன் தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டு விட்டது'' என்றார்.

நீதிபதி கிருபாகரன், ''நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் அரசு அதிகாரிகள் மெத்தனமாக இருக்கிறார்கள். அதனால்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அரசு உயர் அதிகாரிகள் தங்களைப் பெரிய ஆளாக (பிக் பாஸ்) நினைத்துக் கொள்கிறார்கள். 1980-களில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 105. ஆனால்,

''நீதிமன்றத்துக்கு வந்தால் குடியா முழுகிவிடும்?''

இப்போது ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.  ஷீலா பாலகிருஷ்ணன் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரும் மனுமீது பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும்'' என்றார். இதுபோல பல வழக்குகளில் உத்தரவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன? மூத்த வழக்கறிஞர்களிடம் கேட்டோம்.

வழக்கறிஞர் காந்தி: ''நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கும் பண்பு, அரசு அதிகாரிகள் மத்தியில் குறைந்து விட்டது. யார் பெரியவர்? என்ற மனப்பாங்கு மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விட்டால் நாங்கள் செய்ய வேண்டுமா என்ற போக்கு உள்ளது. ஏதாவது சாக்குபோக்குச் சொல்லி நீதிமன்ற உத்தரவைத் தட்டிக் கழிக்கிறார்கள். தாசில்தார், கலெக்டர், துறைச் செயலாளர்கள், தலைமைச் செய லாளர், போலீஸ் அதிகாரிகள் போன்ற அரசு ஊழியர்கள் தங்களது சட்டப்படியான கட மையைச் செய்யத் தவறும் போதுதான் நீதிமன்றத்தில் மக்கள் முறையிடுகிறார்கள். விளக்கம் கேட்க நீதிமன்றத்துக்கு அழைத்தாலும் வருவதில்லை.  நீதிமன்றத்துக்கு வந்தால் குடியா முழுகி விடும்?

இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் தலைவர்கள் எல்லாம் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளித்துள்ளனர். அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் எல்லாம் மக்கள் பணியாளர்கள்தானே? நீதிமன்ற உத் தரவுகளை உடனடியாக முறைப்படி நிறைவேற்றுவதுதான் இதற்குத் தீர்வு''

வழக்கறிஞர் எஸ்.துரைசாமி: ''சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் ஒவ்வொரு நாளும் 25-க்கும் மேற்பட்ட நீதி மன்ற அவமதிப்பு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன. கீழ் நீதிமன்றங்களிலும் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் செயல்​படுத்தவில்லை என்று பல வழக்குகள் பதிவா கின்றன. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டியது இல்லை என்ற எண்ணம் அரசு அதிகாரிகளிடையே நிலவுகிறது. அதிகாரிகளின் பதவி மோகமும் அதிகார ஆணவமும்தான் இதற்குக் காரணம்.  

நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என்றால், அவகாசம் கேட்டு பின்னர், நிறை வேற்றுகிறார்கள். ஆனால், உரிய நேரத்தில் வேலையை செய்யவில்லை என்றுதான் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் வருகிறார்கள். அதிகாரிகளின் கால தாமதத்துக்கு என்ன தண்டனை? நடவடிக்கை கடுமையாக இருந்தால்தான் அதிகாரிகளுக்குப் பயம் ஏற்படும்.''

அதிகாரிகள் உணர்ந்து திருந்த வேண்டும்!

- எஸ்.முத்துகிருஷ்ணன்