Published:Updated:

சென்னை: `மாநகராட்சியில் வேலை' - இளைஞரை ஏமாற்றிய மாநகராட்சி ஊழியர்கள் சிக்கியது எப்படி?

சென்னை மாநகராட்சி
News
சென்னை மாநகராட்சி

மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, இளைஞரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:

சென்னை: `மாநகராட்சியில் வேலை' - இளைஞரை ஏமாற்றிய மாநகராட்சி ஊழியர்கள் சிக்கியது எப்படி?

மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, இளைஞரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி
News
சென்னை மாநகராட்சி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, முனுசாமி தோட்டம், 3-வது தெருவில் வசிப்பவர் கார்த்திக்கேயன் (33). இவரிடம் மாநகராட்சியில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரவணையா, விக்டர்ராஜ், கோபிநாத் ஆகியோர் ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார்கள். அதை நம்பிய கார்த்திக்கேயன், 40,000 ரூபாயை வேலைக்காக மூன்று பேரிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்ட மூன்று பேரும் கார்த்திகேயனுக்கு வாக்குறுதியளித்தப்படி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. அதனால் கார்த்திகேயன், பணத்தை மூன்று பேரிடமும் திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவந்திருக்கின்றனர். இதையடுத்து கார்த்திகேயன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் மோசடி உட்பட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர்.

ரவணையா
ரவணையா

விசாரணையில் ராயபுரத்தைச் சேர்ந்த ரவணையா (55), பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விக்டர்ராஜ்; (65), அவரின் சகோதரர் கோபிநாத் என்கிற கோபி (46) ஆகிய மூன்று பேர் மோசடியில் ஈடுபட்டது தெரிவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைதுசெய்தனர். கைதான ரவணையா, கோபிநாத் ஆகியோர் மாநகராட்சியில் வேலை பார்த்துவருகின்றனர். விக்டர்ராஜ், மாநகராட்சியில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். விசாரணைக்குப் பிறகு மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.