Published:Updated:

நெல்லை: நகைக்காக கொலைசெய்யப்பட்ட மூதாட்டி! - சிறுவன் உள்ளிட்ட மூவரைக் கைதுசெய்த போலீஸ்

கொலை
News
கொலை ( சித்திரிப்புப் படம் )

நெல்லையில் நகைக்காக மூதாட்டியைக் கொலைசெய்த மூவரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:

நெல்லை: நகைக்காக கொலைசெய்யப்பட்ட மூதாட்டி! - சிறுவன் உள்ளிட்ட மூவரைக் கைதுசெய்த போலீஸ்

நெல்லையில் நகைக்காக மூதாட்டியைக் கொலைசெய்த மூவரை போலீஸார் கைதுசெய்தனர்.

கொலை
News
கொலை ( சித்திரிப்புப் படம் )

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகேயுள்ள சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் உஷா. இவரின் கணவர் அருள் மிக்கேல் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்தத் தம்பதியின் மகன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அதனால் 68 வயது மூதாட்டியான உஷா மட்டும் தனியாக வசித்துவந்தார். அவருக்குச் சமையல் செய்வது உள்ளிட்ட வேலைகளை ஜெயா என்பவர் செய்துவந்தார்.

உஷா
உஷா

இரு தினங்களுக்கு முன்பு உஷாவின் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அருகில் வசிப்பவர்கள், உஷாவின் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் உஷா மயங்கிக்கிடந்திருக்கிறார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு உஷாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

உஷாவின் மகன், உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் அவரின் உடல் ஃபிரீஸர் பாக்ஸில் வைக்கப்பட்டது. அப்போது, அவரின் கழுத்திலிருந்த நகை, காதில் கிடந்த கம்மல் ஆகியவை மாயமாகியிருந்தது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ராதாபுரம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் உஷாவின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மூதாட்டி கொலையில் கைதான சிறுவன்
மூதாட்டி கொலையில் கைதான சிறுவன்

உஷா வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தது. நகைகளும் மாயமாகியிருந்ததால், நகைக்காக அவரை மர்ம நபர்கள் கொலைசெய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். அதனடிப்படையில் விசாரணை நடந்தது. பணிப்பெண் ஜெயாவிடம் விசாரணை நடந்தபோது அங்கு வந்த அவரின் 16 வயது மகன் ரஞ்சிதன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்பவரிடம் போலீஸார் சோதனையிட்டதில், அவரது பையில் 11 சவரன் நகைகளை அடகுவைத்ததற்கான ரசீது இருந்தது.

அதையடுத்து ஜெயாவின் மகனிடம் போலீஸார் விசாரித்தபோது, நகைக்காக மூதாட்டி உஷா கொல்லப்பட்டது தெரியவந்தது. உஷா தனியாக இருப்பதை அறிந்த ஜெயாவின் மகனும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிப்பவருமான அந்தச் சிறுவன், உதயபிரகாஷ், மற்றோர் இளைஞருடன் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். தொடர்நது எதிர்பாராத நேரத்தில் உஷாவின் கழுத்தில் கிடந்த நகையை மூவரும் இழுத்திருக்கின்றனர். அதனால் கழுத்து இறுக்கப்பட்டு, மூதாட்டி மயங்கிச் சரிந்திருக்கிறார்.

உதயபிரகாஷ் அவர் மனைவி சகாயசுபா
உதயபிரகாஷ் அவர் மனைவி சகாயசுபா

பின்னர் உஷாவின் கழுத்து, காதில் கிடந்த நகைகளை எடுத்துக்கொண்டு மூவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றிருக்கிறார்கள். நகைகளை அடகுவைக்க உதயபிரகாஷின் மனைவி சகாயசுபா உதவியிருக்கிறார். இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்ட சிறுவன், உதயாபிரகாஷ், அவரின் மனைவி சகாயசுபா ஆகிய மூவரையும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் போலீஸார் கைதுசெய்தனர். அதன் பின்னரே உறவினர்களுக்கு உஷா கொலையான விவரம் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு குற்றவாளியை போலீஸர் தேடிவருகிறார்கள். நகைக்காக மூதாட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் உறவினர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.