Published:Updated:

`OPD முதல் ICU வரை...' - 3 மாதங்களில் கண்டறியப்பட்ட 30 போலி மருத்துவமனைகள்! - குருகிராம் `பகீர்'

குருகிராம் - போலி மருத்துவர்கள்
News
குருகிராம் - போலி மருத்துவர்கள்

ஹரியானா மாநிலம், குருகிராமின் செக்டர் 28-ல் கடந்த மூன்று மாதங்களில் 30 போலி மருத்துவமனைகளை, முதலமைச்சர் அலுவலக பறக்கும் படையினருடன் இணைந்து மாநில சுகாதாரத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

Published:Updated:

`OPD முதல் ICU வரை...' - 3 மாதங்களில் கண்டறியப்பட்ட 30 போலி மருத்துவமனைகள்! - குருகிராம் `பகீர்'

ஹரியானா மாநிலம், குருகிராமின் செக்டர் 28-ல் கடந்த மூன்று மாதங்களில் 30 போலி மருத்துவமனைகளை, முதலமைச்சர் அலுவலக பறக்கும் படையினருடன் இணைந்து மாநில சுகாதாரத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

குருகிராம் - போலி மருத்துவர்கள்
News
குருகிராம் - போலி மருத்துவர்கள்

ஹரியானா மாநிலம், குருகிராமின் செக்டர் 28-ல் கடந்த மூன்று மாதங்களில் 30 போலி மருத்துவமனைகளை, முதலமைச்சர் அலுவலக பறக்கும் படையினருடன் இணைந்து மாநில சுகாதாரத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். மேலும், இன்றைய தினமும் போலி மருத்துவர் ஒருவரைக் கைதுசெய்திருக்கின்றனர்.

ஹரியானா போலீஸார், அண்மையில் எட்டுப் படுக்கைகள் மட்டுமேகொண்ட மருத்துவமனை ஒன்றில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நோயாளிகள் பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின்பேரில், அந்த மருத்துவமனையின் மருத்துவரைக் கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர் போலி மருத்துவர் என்பது தெரியவந்தது.

`OPD முதல் ICU வரை...' - 3 மாதங்களில் கண்டறியப்பட்ட 30 போலி மருத்துவமனைகள்! - குருகிராம் `பகீர்'

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய போலீஸார், ``சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட நபர் ப்ளஸ் டூ வரை மட்டுமே படித்திருக்கிறார். அவர் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அல்ட்ராசவுண்ட், சோனோகிராபி ஆகியவற்றைப் பயன்படுத்தி கர்ப்பிணிகளின் வயிற்றிலிருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறியும் பரிசோதனைகளையும் செய்துவந்திருக்கிறார். போலி மருத்துவர்களால் செயல்பட்டுவரும் சில மருத்துவமனைகள், OPD சேவைகளையும் வழங்குகின்றன. இங்கு நரம்பு ஊசி போடுதல், டிரெஸ்ஸிங் செய்தல், பிளாஸ்டர்கள் போடுதல் மட்டுமின்றி பிரசவங்கள்கூட நடத்தப்படுகின்றன. போலி மருத்துவமனைகள் சிலவற்றில் ஆய்வகங்கள், பரிசோதனைக் கருவிகள், ஐ.சி.யூ., மருந்துகள், தொழிலாளர் அறை, அவசர அறை, அறுவை சிகிச்சை அரங்குகளும் இருக்கின்றன. நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து, கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்" என்றனர்.

மேலும், இது தொடர்பாக டி.எஸ்.பி இந்தர்ஜித் யாதவ் பேசுகையில், ``சுகாதாரத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, இத்தகைய போலி மருத்துவமனைகளில் ஏராளமான வாய்வழி மருந்துகள் மற்றும் ஊசிகள், ரத்தப் பரிசோதனைக் கருவிகள், ஆய்வகங்கள் மற்றும் லெட்டர்பேடுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

கைது
கைது

நீங்கள் இந்த போலி மருத்துவமனைகளின் உள்ளே நுழையும்போது, அவர்கள் மோசடிப் பேர்வழிகள் என்று நீங்கள் சந்தேகிக்க முடியாது. ஆனால், ஆவணங்களைச் சரிபார்த்த பிறகுதான், ஏராளமான மருத்துவமனைகள் உரிய உரிமம் இல்லாமலும், அவற்றை நடத்திவந்தவர்கள் மருத்துவம் பார்ப்பதற்கான தகுதி இல்லாதவர்கள் என்பதும் தெரியவந்தது. இப்படி கைதுசெய்யப்பட்டவர்கள் பலர் பட்டதாரிகள்கூட கிடையாது.

போலீஸ்
போலீஸ்

குருகிராம் பகுதி இத்தகைய மோசடி நபர்களின் மையமாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற நாங்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு, நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்" என்றார்.

இத்தகைய போலி மருத்துவமனைகள் பெரும்பாலும் பாலம் விஹார், பிலாஸ்பூர், கெர்கி தௌலா, நாதுபூர், பஜ்கெரா, சக்கர்பூர், மனேசர், தன்கோட் பங்ரோலா போன்ற இடங்களில் இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இது குறித்து செக்டர் 53 காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.