எட்டு வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட நாகராஜுக்கும் கருப்புக்கும் ஆறு வயதில் ஆஷா என்ற மகளும், மூன்று வயதில் அஜய் என்ற
மகனும், ஒன்றரை வயதில் இன்னொரு மகனும் இருக்கிறார்கள்.
இறப்பு நிகழ்ந்த வீடுகளில் தப்படித்து ஆடுவதுதான்நாகராஜின் தொழில். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அவருக்கு, எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது என்கிறார்கள். இப்படிப் பட்டவர்தான் முதியவர் ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்து... கழுத்தைக் கிழித்துக் கொன்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட் டிருக்கிறார்.
ஏன் இப்படி மாறினார்?!
நாகராஜின் மனைவி கருப்பிடம் பேச முற்பட்ட போது, குழந்தைகளைக் கட்டியணைத்தபடி அழுது கொண்டே இருந்தார். நம்மிடம் பேசும் நிலைமையில் இல்லை. நாகராஜின் மாமா வடிவேலுவிடம் பேசினோம்.
''எல்லார்கிட்டயும் நல்லா பழகிக்கிட்டிருந்தவன், சில மாசமா ஒரு மாதிரியா இருந்தான். தூங்கும்போது திடீர்னு எந்திரிச்சு, 'என்கிட்ட சிவன் பேசினாரு. இதோ வர்றேன்னாரு'னு சொல்லுவான். ஆரம்பத்துல ஏதோ கனாகினா கண்டுருப்பானு இதை பெருசா எடுத்துக்காம விட்டிருக்காங்க. ஆனா நாளாக நாளாக, தெய்வமெல்லாம் தன்னிடம் பேசுவதா சொன்னவன், சிவன் தனக்குள்ளயே |