'நிஷா' புயலைத் தொடர்ந்த வெள்ளத் தாண்டவத்தால் விக்கித்துப் போயி ருக்கும் விவசாயிகளை, மேலும்உலுக்கிப் போட்டிருக்கிறது உரவிலை உயர்வு!
''பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான 'ஸ்பிக்' நிறுவனத்தின் விநியோகக் குளறுபடிகளால், குறிப்பிட்ட ஒரு வகை உரம் மட்டும் கண்டபடி விலை உயர்ந்துவிட்டது!'' என மார்க்சிஸ்ட்களும் ம.தி.மு.க-வினரும் புகார் கிளப்புகிறார்கள். இது தொடர்பாக சி.ஐ.டி.யு-வின் மாநிலச் செயலாளர் கருமலையானிடம் கேட்டோம்.
''தூத்துக்குடியில் உள்ள 'ஸ்பிக்' நிறுவனம் உர உற்பத்தியை அடிக்கடி நிறுத்தி விடுவதால், செயற்கையான உரத்தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதன்படி, இந்த வருஷமும் உரத்தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் இருப்பதைச் சுட்டிக்காட்டி, எங்கள் எம்.பி-யான பெல்லார்மின் தலைமையில் நவம்பர் 16-ம் தேதி தூத்துக்குடியில் நடைபயணம் மேற் கொண்டோம். 'ஸ்பிக்' நிறுவனம் எதிரிலேயே நவம்பர் 20-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்தி உடனடியாக உர உற்பத்தியைத்
தொடங்க வலியுறுத்தினோம். அப்புறம் தான், அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் சிலரை முதல் வரே நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக நவம்பர் 24-ம் தேதியிலிருந்து உர உற்பத்தியைத் தொடங்கி னார்கள். இப்போது உற்பத்தி செய்யப்படும் 'ஸ்பிக் 2020 காம்ப்ளக்ஸ்' அடியுரமாக எல்லாப் பயிர்களுக்கும் தேவைப்படுகிறது. ஆனால், அதைப் போதிய அளவில் உற்பத்தி செய்யாததால்... தட்டுப்பாடு தொடர்கிறது. அதனால் கூடுதல் விலை கொடுத்து அந்த உரத்தை வாங்க வேண்டியிருப்பதாக விவசாயிகள் சொல் கிறார்கள். நெல் நடவு நேரத்தில் 'ஸ்பிக்' நிறுவனத்தால் இப்படி சோதனைகள் எழுவதை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். விரைவில் அடுத்தகட்டப் போராட்டத்தில் இறங்குவோம்...'' என்றார் காட்டமாக.
தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க செயலாளரான ஜோயல் நம்மிடம், ''ஸ்பிக் நிறுவனம் டி.ஏ.பி. உரம், யூரியா ஆகியவற்றைத்தான் அதிக அளவில் உற்பத்தி செய்யும். எப்போதாவதுதான் 2020 காம்ப்ளக்ஸ் உர உற்பத்தியில் இறங்கும். இந்த |