Published:Updated:

பகீர் பங்களாதேஷ்!

பகீர் பங்களாதேஷ்!

இந்திய ஆபத்து
பகீர் பங்களாதேஷ்!
பகீர் பங்களாதேஷ்!

'இந்தியாவின் வெளிப்படையான எதிரி பாகிஸ்தான். ஆனால், நட்புப்போர்வை போர்த்திக்கொண்டு பழகும் பங்களா தேசமோ, துரோகி!இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கும் ஐந்து கோடி வங்கதேசத்தினரை உடனடியாக நாட்டைவிட்டே வெளியேற்ற வேண்டும்' -இப்படி போர்க்கொடி தூக்கியிருப்பது பி.ஜே.பி-யின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு!

பகீர் பங்களாதேஷ்!

இந்த அமைப்பு இந்தியாவுக்குள் புகுந்துள்ள வங்கதேசத்தினரை எதிர்த்துக் கடந்த நவம்பர் 12-ம் தேதி தேசிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டது. இதில் 25,000 கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. போராட்டத்தை நடத்தியிருக்கும் ஏ.பி.வி.பி-யின் அகில இந்தியச் செயலாளர் சந்தீப்குமாரைசந்தித்துப் பேசினோம்.

''1947 ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தபோது, இன்றைய பங்களாதேஷ், அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் முகமது அலி

ஜின்னா தலைமையின் கீழ் இருந்தது. அப்போதே அவர்களுக்கு நம்முடைய அஸ்ஸாம் மாநிலத்தின் மீது ஒரு கண். தன் செயலாளரிடம், 'இன்னும் பத்து வருடம் கழித்து அஸ்ஸாமை பாகிஸ்தானுடன் இணைப்பேன்' என்று முகமது அலி ஜின்னா சொன்னதாகத் தகவல் உண்டு. 1962-ல் பாகிஸ்தான் அதிபராக இருந்த ஜுல்ஃபிகர் அலி புட்டோவும் ஜின்னாவின் இந்தக் கருத்தை ஆமோதித்துப் பேசினார். 1971-ல் கிழக்கு பாகிஸ்தான், பங்களாதேஷ் என்னும் தனி நாடாகப் பிரிந்தது. முஜிபுர் ரஹ்மான் அந்த நாட்டின் முதல் அதிபரானார். அந்த நாட்டை நட்பு நாடாக பாவித்தது இந்தியா. ஆனால், ஜின்னா மாதிரியே முஜிபுரும் கனிவளம், காடுவளம் மிக்க அஸ்ஸாமின் முக்கியமான பகுதிகளையும், பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளையும் தனது நாட்டோடு சேர்த்து 'மகா பங்களாதேஷ் உருவாக்கியே தீருவேன்' என்று அடம் பிடித்தார்.

அடுத்து அதிபரான ஷேக் ஹசீனாவுக்கும் அந்த ஆசை இருந்தது. அதன் எதிரொலியாக கும்பல் கும்பலாக அங்கிருந்து பயங்கரவாதிகள் அஸ்ஸாமில் ஊடுருவ ஆரம்பித்தார்கள். அஸ்ஸாமில் இன்று குடியேறியிருக்கும் பங்களாதேஷ் வாசிகளுக்கு ஓட்டுரிமை, ரேஷன் கார்டு போன்றவற்றை வாங்கிக்கொடுத்து அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது 'அஸ்ஸாம் யுனைடெட் டெமாக்ரடிக் ஃபிரன்ட்' என்ற கட்சி. அக் கட்சியில் 11 எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். பக்ருதீன் அஜ்மத்தைத் தலைவராகக் கொண்ட அந்தக்கட்சி, தங்களுக்கென்று

பகீர் பங்களாதேஷ்!

'தன்னாட்சிமிக்க தனி நாடு' வேண்டுமென்று போராடி வருகிறது. சமீபத்தில் எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்பதற்காக ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இது வழக்காக கோர்ட்டுக்குப் போனது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'பங்களாதேஷைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் இந்திய அரசியல் சட்டப்படி எந்த மாநிலத்திலும் சட்டமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது!' என்று மனுவைத் தள்ளுபடி செய்தார். இது தெரிந்தும் பக்ருதீன் அஜ்மத் கட்சி தன்னாட்சி கேட்டுப் போராடுவது என்ன நியாயம்?

இன்னொரு பக்கம் பங்களாதேஷ், இந்தியாவில் ரத்தக்களறி ஏற்படுத்தும் செயல்களில் இறங்கிவருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 'உதால்குரி' மாவட்டத்தில் 321 கிராமங்கள் இருக்கின்றன. கடந்த அக்டோபர் 2, 3 தேதிகளில் அந்தப் பகுதிகளில் திடீரென பங்களாதேஷ் பயங்கரவாதிகள் புகுந்தனர். அங்குள்ள வீடுகளைச் சூறை யாடி தீவைத்தனர். இப்போது, அஸ்ஸாமிலேயே 50

பகீர் பங்களாதேஷ்!

அகதிகள் முகாம் அமைத்து பாதிக்கப்பட்ட கிராமத்து மக்களைப் பாதுகாத்து வருகிறார்கள். இதையெல்லாம் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

இந்தியா பங்களாதேஷ் எல்லைப் பகுதி 4,000 கி.மீ. நீளம் கொண்டது. இதில் 80 சதவிகிதம் பாதுகாப்பு கம்பிவேலி போடப்பட்டுள்ளது என்று இந்திய அரசு சொல் கிறது. ஆனால், 30 சதவிகிதப் பரப்பில்தான் கம்பி வேலிகள் போடப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான் பார்டரில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை தீவிரமாகச் செயல்படுகிறது. அனுமதியின்றி ஒரு பாகிஸ்தானியர் புகுந்தாலும் அவரைச் சுட்டுக் கொல்லச் சட்டமிருக்கிறது. ஆனால், பங்களாதேஷ் எல்லையிலோ பாது காப்பே இல்லை. இதனால் வங்காளம், ஜார்கண்ட், மேகாலயா, அஸ்ஸாம், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், பீகார் என எல்லா மாநில எல்லை வழியாகவும் பங்களா தேஷ்வாசிகள் சுலபமாக நுழைகிறார்கள். இவர்களில் மூன்று பிரிவினர் இருக்கிறார்கள். அங்குள்ள முஸ்லிம் அரசு செய்யும் கொடுமைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பார்டர் வழியாக இந்தியாவுக்குள் வரும் இந்துக்கள் ஒரு வகை. வேலை வாய்ப்புத்தேடி வரும் கூட்டம் இன்னொரு வகை. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் கூட்டம் மற்றொரு வகை. இந்த மூன்றாவது வகைக் கூட்டம் பாகிஸ்தானின் 'இண்டர் சர்வீஸ் இண்டலிஜென்ஸ்' (ஐ.எஸ்.ஐ.) என்ற உளவு ஸ்தாபனத்துடனும், பங்களாதேஷில் இருக்கும் 'ஹ¨ஜி' என்ற பயங் கரவாத அமைப்புடனும் சேர்ந்து நேபாளத்தில் இருந்துகொண்டு இந்தியாவில் குழப்பத்தை உருவாக்கிவருகிறது.

அது மட்டுமில்லை, ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் கடத்தப்படுகின்றன. ஒரு ரூபாயில் இருக்கும் உலோகத்தால் பிளேடுகள் தயாரித்து பங்களாதேஷில் விற்பனை செய்கின்றனர். ஐந்து ரூபாய் காசிலிருக்கும் நிக்கலை துப்பாக்கி தோட்டா தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். மேற்கு பாகிஸ்தானில் தலைவிரித்தாடும்

கஞ்சா, ஹெராயின் போதைப் பொருள்களை இந்தியாவுக்குக் கடத்திவருகிறார்கள். ஒரு பக்கம் பணம்... இன்னொரு பக்கம் இந்திய இளைஞர்களின் சீரழிவு! 1000, 500 ரூபாய் கள்ள நோட்டுகளையும் இந்தியாவில் புழக்கத்தில் விட்டு வருகின்றனர்.

ஹைதராபாத், ராஜஸ்தான், அஸ்ஸாம், பெங்களூருவில் இருக்கும் இந்தியன் இன்ஸ் டிடியூட் போன்ற இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளின் பின்னணியில் ஹ¨ஜி பயங்கரவாத அமைப்பு இருக்கிறது என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

'இந்தியாவில் பங்களாதேஷ்வாசிகள் ஐந்து கோடிப் பேருக்கு மேல் வசிக்கின்றனர்'

பகீர் பங்களாதேஷ்!

என்று முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ஜோகிந்தர்சிங் கூறியுள்ளார். யாரெல்லாம் பங்களாதேஷ்வாசிகள் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் சட்டத்தை ஏமாற்றிப் பெற்ற ஓட்டுரிமை, ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய வேண்டும். அவர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்.

இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான லடாக், பதற்றமான பகுதி. அதைப்போலவே பீகார் பகுதியிலுள்ள பார்டரில் 'சிக்கன் நெக்' என்றொரு பகுதி இருக்கிறது. இது கோழியின் கழுத்தைப் போல் குறுகலான எல்லைப் பகுதி. இங்கே முழுக்க முழுக்க பங்களாதேஷைச் சேர்ந்த முஸ்லிம்களே ஆக்கிரமித்திருக் கிறார்கள். இதையும் மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலும் பங்களாதேஷ்வாசிகள் குடியேறிவருகிறார்கள் என்பது லேட்டஸ்ட் ஷாக். மொத்தத்தில் இதெல்லாம் முடிவுக்கு வரவேண்டும் என்று தான் நாங்கள் போராடுகிறோம்!'' என்றார் சந்தீப் குமார்.

பகீர் பங்களாதேஷ்!

இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னால் அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்கும் நோக்கமும் கலந்தே இருக்கலாம். ஆனால், குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்று பார்த்து உடனடியாக உரிய நடவடிக்கையில் இறங்குவது மத்திய அரசின் கட்டாயக் கடமை தான்! கொடூரமாக நடந்து முடிந்த குண்டு வெடிப்புகளுக்குப் பிறகாவது, மத்திய அரசு அஸ்ஸாம் விஷயத்தில் எந்தளவுக்கு விழிப்பு காட்டுகிறதோ..!-

- எம்.குணா