''தமிழக அரசு மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளால் டிசம்பரிலிருந்து வரும் ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது!'' என்று அறிவித் திருக்கிறார் மின்துறை அமைச்சர் ஆற்'கட்'டார்... ஸாரி ஆற்காட்டார்.
ஆனால், ''அரசின் மெத்தனப் போக்காலும் நிர்வாகக் கோளாறுகளாலும் வருங்காலங்களில் மின் வெட்டுப் பிரச்னை இப்போது இருப்பதைவிடவும் மோசமாகப் போகிறது!'' என்று பதற வைக்கிறார் 'தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின்' மாநில துணைத் தலைவர் குமாரவேல்.
இது தொடர்பாக அவரை சந்தித்தபோது, ''தமிழ் நாட்டில் இருக்கிற தூத்துக்குடி, மேட்டூர், வட சென்னை, எண்ணூர் அனல் மின்நிலையங்களுக்கு
வடமாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிருந்தும் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது. லட்சக்கணக்கான டன்கள் அளவுக்குக் கொள்முதல் செய்யப்படும் இந்த நிலக்கரி இறக்குமதி விவகாரத்தில், அதிகாரிகள் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தரமற்று இருப்பதாக சமீபகாலமாக குற்றசாட்டு கிளம்பி வருகிறது. அரசோ இதை மறுக்கிறது. ஆனால்,
தொடர் மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு மக்களிடம் சரியான காரணம் சொல்லமுடியாமல் திணறி வரும் தமிழக அரசும் மின்சார வாரியமும்... இப்போது நிலக்கரி கொள்முதல் விவகாரத்திலும் சரியான திட்டமிடல் இல்லாமல் திணறுகின்றன. நிலக்கரி கொள்முதல் தொடர்பாக வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் போகும் அதிகாரிகளிடம், அங்கி ருக்கும் நிலக்கரி நிறுவனங்கள் அதிக எரிதிறன் கொண்ட சூப்பரான நிலக்கரியை சாம்பிளாகக் காட்டுகின்றன. அதோடு, அதிகாரிகளையும் அவர்கள் மூலம் பொறுப்பான அரசியல்வாதிகளையும் அந்த நிறுவனங்கள் 'உரிய முறையில் கவனித்து' அனுப்பி விடுகின்றன.
|