Published:Updated:

என்.கே.கே.பி.ராஜாவை நோக்கி அடுத்த அம்பு...

என்.கே.கே.பி.ராஜாவை நோக்கி அடுத்த அம்பு...

என்.கே.கே.பி.ராஜாவை நோக்கி அடுத்த அம்பு...
எம்.எல்.ஏ. பதவிக்கும் ஆபத்து?
என்.கே.கே.பி.ராஜாவை நோக்கி அடுத்த அம்பு...
என்.கே.கே.பி.ராஜாவை நோக்கி அடுத்த அம்பு...

முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீதான நில அபகரிப்பு விவகாரம், பல்வேறு திசைகளில் சர்ச்சைகளை கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாகத்தான்... 'ராஜா சட்ட விரோதமாக இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். இதைத் தேர்தல் ஆணையத்திடம் அவர் மறைத்து விட்டதால், அவருடைய எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க வேண்டும்!' என தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்கிறார் பெருந்துறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்பிரமணியம்.

நில அபகரிப்பு விவகாரத்தில் என்.கே.கே.பி.ராஜாவின் தூண்டுதல் பேரில் கடத்தப்பட்டதாகச் சொல்லப் படும் பழனிச்சாமி, மலர்விழி, குகமணி ஆகியோரின் உறவினர்தான் சுப்பிரமணியம். இந்த புகாரின்பேரில், அவரை விசாரித்து அவரிடம் உள்ள ஆதாரங்களை சேகரித்து

அனுப்பும்படி, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மகேசன் காசிராஜனுக்கு உத்தரவிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.

அதனடிப்படையில் கலெக்டரின் அழைப்பை ஏற்று நவம்பர் 28-ம் தேதி, டிசம்பர் 1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கலெக்டர் முன்பு ஆஜராகி தன் தரப்பு ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறார் சுப்பிரமணியம். இது பற்றி அவரிடமே பேசினோம். ''ராஜாவின் ஆட்களால் கடத்தப்பட்ட மலர்விழி, பழனிச்சாமி, சிவபாலன் ஆகியோரை பாரத் மில்லில் தனி அறையில் அடைத்து மிரட்டி பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார்கள். வழக்குக்காக ஆதாரங்களைத் தேடியபோது, அந்த சம்பவம் நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பாக பாரத் மில், உமாமகேஸ்வரி என்பவரின் பெயரில் வாங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. டாக்குமென்ட்டுகளில் என்.கே.கே.பி.ராஜாவின் மனைவி உமாமகேஸ்வரி என்றிருந்தது (முன்பே ஜூ.வி-யில் இதைக் கூறியிருக்கிறோம்). ராஜா தேர்தலில் நிற்கும்போது முதல் மனைவி பரிமளா பற்றிதான் குறிப்பிட் டுள்ளார். இரண்டாவது மனைவி இருப்பதைப் பற்றிச் சொல்லவில்லை.

இது தேர்தல் கமிஷனை ஏமாற்றும் செயல். மேலும், ராஜா அரசியல் சாசனத்தின்படி உறுதிமொழி எடுத்துக் கொண்டு அமைச்சர் பதவியும் வகித்தவர். ராஜாவின் இரண்டாவது திருமணம், இந்து திருமணச் சட்டப்படி குற்றமாகும். அமைச்சர் ஆன பின்புதான் திருமணம் செய்திருந்தார் என்றால், அது அதைவிட பெரிய குற்றமல்லவா?

ராஜா தன் முதல் மனைவி பரிமளா இருக்கும் கவுந்தப்பாடி முகவரியில் ஒரு ரேஷன் கார்டும், இரண்டாவது மனைவி உமா மகேஸ்வரி இருக்கும் ஈரோடு விலாசத்தில் இன்னொரு ரேஷன் கார்டும் வைத்திருப்பதைக் கண்டுபிடித்தேன். இரண்டு ரேஷன் கார்டிலும் ராஜாதான் குடும்பத்தலைவர் என்றிருக்கிறது. ஒருவரின்

என்.கே.கே.பி.ராஜாவை நோக்கி அடுத்த அம்பு...

பெயர், ஒரு ரேஷன் கார்டில்தான் இருக்கவேண்டும் என்பது சட்டம். ஆனால், என்.கே.கே.பி.ராஜாவுக்கு மட்டும் இரண்டு கார்டில் பெயர் இருக்கிறதே... எப்படி? அதுவும் அமைச்சர் ஆன பின்புதான் இன்னொரு கார்டை வாங்கியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் தேர்தல் கமிஷனுக்கு ஆதாரமாக கலெக்டரிடம் தந்திருக்கிறேன்!'' என்றார்.

சுப்பிரமணியத்தின் இந்த அதிரடி புகார் பற்றி முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவிடம் கேட்டோம்.

''என் இரண்டாவது மனைவி பற்றிக் கேட்க யாருக்கும் உரிமை கிடையாது. அதை யார் கேட்க வேண்டுமோ, அவர்கள்தான் கேட்கவேண்டும். இது தேர்தல் கமிஷன் சட்டத்துக்கு உட்பட்டதா, அரசியல் சாசனத்துக்கு உட்பட்டதா என்பதற் கெல்லாம் சட்டப்படி பதில் சொல்வேன்.பெருந்துறை நில விவகாரத்தில் மலர்விழியின் மகன் சிவபாலன் என்னுடைய கஸ்டடியில் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு போட்டார்கள். அது தள்ளுபடி ஆகிவிட்டது. அதையடுத்து, என்ன செய்வது என்ற ஆத்திரத்தில் இப்போது என்னுடைய சொந்த விஷயத்தைக் கையில் எடுத்திருக்கிறார் சுப்பிரமணியம்!'' என்றார் காட்டமாக.

இந்த பிரச்னையில் அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் ஈரோட்டு மக்களின் லேட்டஸ்ட் பட்டிமன்றம்!

ராஜா பாடு கஷ்டம்தான்... இந்த நில அபகரிப்புப் புகார் வெடித்த நேரம்தொட்டு, உலகத்துக்கு பதில் சொல்வதிலேயே அவருக்குப் பாதி நேரம் கழிந்து கொண்டிருக்கிறது!

நீதிபதி எழுப்பிய கேள்வி!

பெருந்துறை நில அபகரிப்பு, ஆள்கடத்தல், வீடு இடிப்பு வழக்குகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் இருக்கும் 18 பேரில் 7 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் டிசம்பர் இரண்டாம் தேதி நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.

என்.கே.கே.பி.ராஜாவை நோக்கி அடுத்த அம்பு...

பெருந்துறை நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், நகர இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரங்கசாமி, இடிக்கப்பட்ட வீட்டிலிருந்த மாடுகளை விற்ற நாகராஜன், பெருந்துறை பத்திர எழுத்தாளர் கருணாகரன், இடிக்கப்பட்ட வீடுகளின்

சாமான்களைக் கொண்டு சென்ற டிப்பர் லாரி உரிமையாளர் சந்திர சேகரர், கார் ஓட்டிய மோகன்ராஜ் ஆகியோர் இரண்டு மாத சிறை வாசத்துக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்கள்.

ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி சுதந்திரம், ''இந்த விவகாரத்தில் இதுவரை 18 குற்றவாளிகளை போலீஸ் கைது செய்துள்ளது. இன்னும் 11 பேரை கைது செய்யவில்லை.

முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவின் தூண்டுதல் பேரில்தான் சம்பவம் நடந்ததாக பழனிச்சாமி வாக்குமூலம் கொடுத்திருந்தும், ராஜாவை குற்றவாளிகள் பட்டியலில் போலீஸார் சேர்க்காமல் விட்டது ஏன் என்பது ஆச்சரியமாக உள்ளது. பெருந்துறை போலீஸாரின் விசாரணை

சரியில்லை என்றுதானே சி.பி.சி.ஐ.டி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் மாற்றியது. சி.பி.சி.ஐ.டி-யின் விசாரணையைப் பார்த்தால் கோர்ட்டின் நோக்கத்துக்கு ஈடாக அவர்கள் செயல்படவில்லை என்று தெரிகிறது...'' என்று கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

 

- ஏ.முகமது ரஃபி