போனாரு. அதுக்குப் பின்னாடி அன்னிக்கு ராத்திரி ஒன்பதரை மணிக்கு தல்லாகுளம் ஏ.சி-யான விஜயரகுநாதன், பத்துப் பதினஞ்சு போலீஸ்காரங்களோட வீட்டுக்கு வந்தாரு...'' என்றவர் கண்கலங்கிப் பேச முடியாமல் தவிக்க... அவரின் மூத்த மகள் அங்கயற்கண்ணி தொடர்ந்தார்.
''வந்தவங்க 'என்ன ஏது'னுகூட கேட்காம, அம்மாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போயிட்டாங்க. அடுத்தநாள் மதியம் வரைக்கும் அம்மாவை ஸ்டேஷன்ல வெச்சுருந்துட்டு, 29-ம் தேதி சாயந்தரம் கோர்ட்டுல ஆஜர்படுத்தினாங்க. ஸ்டேஷன்ல பண்ண டார்ச்சர்ல, அம்மாவுக்கு உடம்பு முடியாம போயிடுச்சு. அதனால, உடனடியா ஆஸ்பத்திரியில சேர்க்க சொல்லி கோர்ட் ஆர்டர் போட்டுருச்சு. அதுக்கப்புறம், ஜாமீன்ல வந்திருக்காங்க...'' என்றார் வேதனையோடு.
சுசீலாவுக்கு ஆதரவாகக் களமிறங்கி இருக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜெயச்சந்திரனை சந்தித்தோம். ''சுசீலாவின் கணவர் போலீஸ் ஏட் டாக இருந்தும், அவரால ஒண்ணும் பண்ண முடியலை! கட்சிக்காரங்க மிரட்டுனதுல அவர் தலைமறைவா சுத்திக்கிட்டு இருக்காரு. சுசீலாவோட வீட்டை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்குறதுதான் ரவீந்திரனோட திட்டம். இந்த ஒரு வருஷத்துல மட்டும் ஏகப் பட்ட அரசு ஊழியர்கள் தி.மு.க-வினரால் தாக்கப்பட்டு இருக்காங்க...'' என்று நிறுத்த... அந்த சம்பவங்களைப் பட்டியலிட்டார், சங்கத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் செல்வம்.
''பத்து மாசம் முன்னாடி மதுரை திட்ட அலுவலகப் பொறியாளர் அறம் என்பவரை, கான்ட்ராக்டர் ஒருத்தர் தாக்கினாரு. திருமங்கலம் நகராட்சி ஊழியர் வாசுதேவனை நகராட்சித் துணைத் தலைவர் செருப்பால் அடிச்சிருக்கார். ஆனையூர் பஞ்சாயத்துத் தலைவி அய்யம்மாள் ஒரு பில்கலெக்டரைத் தாக்கியிருக்காங்க. நாகர்கோவில்ல அமைச்சர் சுரேஷ் ராஜன் முன்னிலையிலேயே மேடையில் வெச்சு துணை கலெக்டரை அடிச்சிருக்காங்க. ஆர்.எஸ்.மங்களம் யூனியன் கமிஷனர் முருகேசனை, யூனியன் தலைவர் செருப்பால் அடிச்சிருக்காரு. தாக்குனவங்க எல்லாருமே தி.மு.க-காரங்கதான்!
|