Published:Updated:

மாணவியிடம் பாலியல் அத்துமீறல்... வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் - அண்ணன், தம்பி உட்பட 5 பேர் கைது

பாலியல் சீண்டல்
News
பாலியல் சீண்டல் ( சித்திரிப்பு படம் )

சேலத்தில் 9-ம் வகுப்பு மாணவியிடம் கும்பலாகப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதை வீடியோ எடுத்து மிரட்டிய ஐந்து பேரை, போலீஸார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

Published:Updated:

மாணவியிடம் பாலியல் அத்துமீறல்... வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் - அண்ணன், தம்பி உட்பட 5 பேர் கைது

சேலத்தில் 9-ம் வகுப்பு மாணவியிடம் கும்பலாகப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதை வீடியோ எடுத்து மிரட்டிய ஐந்து பேரை, போலீஸார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

பாலியல் சீண்டல்
News
பாலியல் சீண்டல் ( சித்திரிப்பு படம் )

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார். மாணவியின் தந்தை மெடிக்கல் சென்டர் வைத்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி காலை, வீட்டிலிருந்து கடைக்குச் சென்று வருவதாகக் கூறிச்சென்ற மாணவி, இரவு வெகுநேரமாகியும் திரும்பவில்லை.

கைது
கைது

பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மாணவியின் தந்தை புகாரின்படி சூரமங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து, மாணவியைத் தேடிவந்தனர். இந்த நிலையில், மறுநாள் (26-ம் தேதி) இரவு 9 மணிக்கு மாணவி வீடு திரும்பினார். மீண்டும் மறுநாள் மாலையில் மாயமான மாணவி, இரவில் வீடு திரும்பினார். இது குறித்து தந்தை விசாரித்தபோது, மளிகைக்கடையில் வேலை செய்துவரும் வினித் (23), தந்தை அழைத்து வரச் சொன்னதாகக் கூறி பைக்கில் தேக்கம்பட்டி காட்டுக்குக் கூட்டிச்சென்று பாலியல் சீண்டல் செய்தார்.

மறுநாளும் இவ்வாறு அழைத்துச்சென்று வினித், அவரின் சகோதரர், நண்பர்கள் மூன்று பேர் என ஐந்து பேர் கும்பலாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதை வீடியோ எடுத்து, ``நாங்கள் எப்போதெல்லாம் வரச்சொல்கிறோமோ வர வேண்டும். இல்லையெனில் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவோம்” என மிரட்டியதாகக் கூறியிருக்கிறார்.

இது பற்றி தகவல் தெரிந்து பதறிப்போன மாணவியின் தந்தை சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து மாணவியைக் கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தேக்கம்பட்டியைச் சேர்ந்த வினித் (எ) ஆசாரி, அவரின் தம்பி விக்னேஷ்(21), நண்பர்களான ஆகாஷ்(எ) தக்காளி(19), அருண்குமார்(28), விக்னேஷ்(21) ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்தனர். அவர்கள்மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.