Published:Updated:

ஜம்மு-காஷ்மீர்: ராணுவ வாகனம்மீது பயங்கரவாதத் தாக்குதல்; 5 வீரர்கள் பலி - இந்திய ராணுவம் சொல்வதென்ன?

தாக்கப்பட்ட ராணுவ வாகனம்
News
தாக்கப்பட்ட ராணுவ வாகனம் ( ட்விட்டர் )

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் பலியாகியிருக்கின்றனர்.

Published:Updated:

ஜம்மு-காஷ்மீர்: ராணுவ வாகனம்மீது பயங்கரவாதத் தாக்குதல்; 5 வீரர்கள் பலி - இந்திய ராணுவம் சொல்வதென்ன?

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் பலியாகியிருக்கின்றனர்.

தாக்கப்பட்ட ராணுவ வாகனம்
News
தாக்கப்பட்ட ராணுவ வாகனம் ( ட்விட்டர் )

ஜம்மு-காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சன்ஜியாத் நகரை நோக்கி ராணுவத்துக்குச் சொந்தமான வாகனத்தில் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மறைந்திருந்த சிலர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதில் ஐந்து வீரர்கள் பலியாகியிருக்கின்றனர். தேசியப் புலனாய்வுக்குழு தாக்குதல் நடந்த இடத்துக்குச் செல்லும் வழியிலும், பாதுகாப்புப் படையினர் எல்லைக்கு அருகிலுள்ள பகுதியிலும் சோதனை நடத்திவருகின்றனர்.

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்
மாதிரிப் படம்

இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "ராணுவத்துக்குச் சொந்தமான வாகனத்தில் ராணுவ வீரர்கள் ஜம்மு-காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சன்ஜியாத் நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ராணுவ வாகனத்தை நோக்கி கையெறி குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் திடீர் தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவத்தில் ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

படுகாயமடைந்த ஒருவர் ரஜோரி நகரிலுள்ள ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று மாலை பனிமூட்டம் அதிகமாக இருந்த சூழலைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் ஹவில்தார் மன்தீப் சிங், லேன்ஸ் நாயக் தெபாசிஷ் பஸ்வால், லேன்ஸ் நாயக் குல்வந்த் சிங், ஹர்கிருஷ்ணன் சிங், சேவாக் சிங் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

இந்தத் தாக்குதல் தொடர்பாக ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், "பிப்ரவரி 14, 2019 அன்று புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள்மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இது’’ என்று விளக்கியிருக்கிறார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,"பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின்மீதான தாக்குதலில் இந்திய ராணுவம் தனது துணிச்சலான வீரர்களை இழந்த சோகத்தை அறிந்து வேதனையடைந்தேன். இந்தச் சோகமான நேரத்தில், என் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் இருக்கின்றன. நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய செழுமையான சேவையை என்றும் மறக்க முடியாது" என்று பதிவிட்டிருக்கிறார்