Published:Updated:

`கேரளா டு தமிழ்நாடு' - கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொட்டியவருக்கு ரூ.50,000 அபராதம்!

கோழி இறைச்சிக் கழிவு
News
கோழி இறைச்சிக் கழிவு

கோவை எல்லைப் பகுதியில் கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் சென்ற, கேரளா நபருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

Published:Updated:

`கேரளா டு தமிழ்நாடு' - கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொட்டியவருக்கு ரூ.50,000 அபராதம்!

கோவை எல்லைப் பகுதியில் கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிவிட்டுச் சென்ற, கேரளா நபருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கோழி இறைச்சிக் கழிவு
News
கோழி இறைச்சிக் கழிவு

கேரளாவிலிருந்து கொண்டுவரப்பட்டு, தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளில் மருத்துவ, இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. கேரள மாநிலத்திலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு சரக்கு ஆட்டோவில் கோழி இறைச்சிக் கழிவுகளை ஏற்றிவந்து, வாளையார் எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சிலர் கொட்டியிருக்கின்றனர்.

மருத்துவக் கழிவு
மருத்துவக் கழிவு
கோப்புப் படம்

இதைப் பார்த்த இளைஞர்கள், அவர்களைச் சுற்றிவளைத்து கேள்வி கேட்டிருக்கின்றனர்.

அப்போது சரக்கு ஆட்டோவில் வந்தவர், அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியிருக்கிறார். ‘கழிவுகளை எடுக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என இளைஞர் ஒருவர் கூறியவுடன், கொட்டிய இறைச்சிக் கழிவுகளையெல்லாம் மீண்டும் எடுத்து ஆட்டோவில் போட்டனர்.

கோழிக்கழிவு
கோழிக்கழிவு

உடனடியாகச் சம்பவ இடத்துக்கு வந்த மாவூத்தம்பதி ஊராட்சி அதிகாரிகள் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும் கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிய கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜூ என்பவருக்கு மாவூத்தம்பதி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

கோழி இறைச்சிக் கழிவு
கோழி இறைச்சிக் கழிவு

அதனடிப்படையில் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டு, வாகனத்தை மீட்டுச் சென்றனர்.