Published:Updated:

சென்னை: நகைக்கடை ஷட்டரில் ஓட்டைபோட்டு 9 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த கும்பல் - விசாரணையில் போலீஸ்

சென்னை நகைக்கடையில் கொள்ளை
News
சென்னை நகைக்கடையில் கொள்ளை

சென்னையிலுள்ள ஒரு நகைக்கடையில் ஷட்டரை வெல்டிங் மெஷினால் வெட்டி, கடையிலிருந்து தங்க, வைர நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது.

Published:Updated:

சென்னை: நகைக்கடை ஷட்டரில் ஓட்டைபோட்டு 9 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த கும்பல் - விசாரணையில் போலீஸ்

சென்னையிலுள்ள ஒரு நகைக்கடையில் ஷட்டரை வெல்டிங் மெஷினால் வெட்டி, கடையிலிருந்து தங்க, வைர நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றிருக்கிறது.

சென்னை நகைக்கடையில் கொள்ளை
News
சென்னை நகைக்கடையில் கொள்ளை

சென்னை, பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் ஸ்ரீதர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த எட்டு வருடங்களாக அதே பகுதியில் ஜே.எல்.கோல்டு பேலஸ் என்ற நகைக்கடையை நடத்திவருகிறார். ஸ்ரீதர் நகைக்கடை அமைந்திருக்கும் இரண்டாவது தளத்தில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். இந்த நிலையில், கடை ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம்போல நகைக்கடையை மூடிவிட்டு ஸ்ரீதரிடம் சாவியை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

துளையிடப்பட்ட கடையின் ஷட்டர்
துளையிடப்பட்ட கடையின் ஷட்டர்

இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீதர் கடையைத் திறப்பதற்காக வந்திருக்கிறார். அப்போது முதல் தளத்திலுள்ள கடையின் இரும்பு ஷட்டர் வெல்டிங் மெஷினால் வெட்டப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர், கடைக்குள் சென்று பார்த்திருக்கிறார். அங்கு லாக்கர் அறையின் கதவும் வெல்டிங் மெஷினால் வெட்டப்பட்டிருந்தது. அதோடு, லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஒன்பது கிலோ தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரங்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தார்கள்.

கடையிலிருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கும் திருடப்பட்டிருந்தது. ஸ்ரீதர் தன் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து திரு.வி.க நகர்ப் பகுதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். சம்பவமறிந்து விரைந்து வந்த போலீஸார், கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடைக்குச் சென்று விசாரணையைத் தொடர்ந்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்

நகைக்கடையை ஒட்டியிருந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீஸார் ஆய்வு நடத்திவருகிறார்கள். அதோடு, நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை செய்துவருகின்றனர். கொள்ளைக் கும்பலைப் பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறது சென்னை போலீஸ். சென்னையில் முக்கியமான சாலையிலுள்ள நகைக்கடையில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.