Published:Updated:

கரூர்: அனுமதியில்லாமல் ஊர்வலம், தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ- கட்டபொம்மன் விழாவுக்கு வந்தவர்கள்மீது வழக்கு

பானுமதி
News
பானுமதி

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்டோர்மீது கரூர் நகர காவல் நிலைய போலீஸார் இன்று வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

Published:Updated:

கரூர்: அனுமதியில்லாமல் ஊர்வலம், தாக்கப்பட்ட பெண் எஸ்.ஐ- கட்டபொம்மன் விழாவுக்கு வந்தவர்கள்மீது வழக்கு

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்டோர்மீது கரூர் நகர காவல் நிலைய போலீஸார் இன்று வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

பானுமதி
News
பானுமதி

கரூரில், சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை, வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம், பல்வேறு அமைப்பினர் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், பல்வேறு அமைப்பினர் சார்பில் இந்த வருடமும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. கரூர் தாலுகா அலுவலகத்துக்கு முன்பு தேவராட்டம் நடத்துவதற்கும், பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும், கரூர் போலீஸார் தரப்பில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

போலீஸார் தடியடி
போலீஸார் தடியடி

ஆனால், இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் செல்லத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் ஏராளமான இளைஞர்கள் அனுமதியை மீறி ஜவகர் பஜார் பகுதியில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், வாகனத்தில் அதிக ஒலி எழுப்பிக்கொண்டு அதிவேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், ஊர்வலம் நடத்தத் தடைவிதித்தனர். மேலும், பெண் போலீஸ் எஸ்.எஸ்.ஐ பானுமதி என்பவர், இளைஞர்களின் வண்டிகளிலிருந்து சாவியை எடுத்ததாகத் தெரிகிறது.

இதில் கோபமடைந்த இளைஞர்கள், அவர் உள்ளிட்ட பெண் போலீஸாரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, எஸ்.எஸ்.ஐ பானுமதியின் கையை முறுக்கி, அவரை அந்த இளைஞர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன் விளைவாக, போலீஸார் வேறு வழியின்றி கூட்டத்தைக் கலைக்கத் தடியடி நடத்தினர். இதனால், அந்த இளைஞர்கள் சிதறி ஓடியிருக்கிறார்கள். அதன் பிறகு, காவல்துறை தங்களைத் தாக்கியதாகச் சொல்லி அவர்கள் மதுரை பைபாஸ் சாலையில், சாலைமறியல் போராட்டம் நடத்தவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அங்கு விரைந்து சென்ற போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விவகாரத்தை சுமுகமாக்கினர். அதன் பிறகு, இளைஞர்களின் தேவராட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

 போலீஸார்
போலீஸார்

இதைத் தொடர்ந்து, திருச்சி பைபாஸில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர். இந்த நிலையில், அனுமதியின்றி இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது, போலீஸாருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது, தாக்கியது உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்டோர்மீது கரூர் நகர காவல் நிலைய போலீஸார் இன்று வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.