Published:Updated:

பேருந்து நிறுத்தத்தில் தூங்கிய நபர் கழுத்தறுத்து கொலை; இருவர் கைது - சென்னையில் அதிர்ச்சி

பேருந்து நிறுத்தத்தில் தூங்கிய நபர் கழுத்தறுத்து கொலை
News
பேருந்து நிறுத்தத்தில் தூங்கிய நபர் கழுத்தறுத்து கொலை

சென்னை பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவர் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:

பேருந்து நிறுத்தத்தில் தூங்கிய நபர் கழுத்தறுத்து கொலை; இருவர் கைது - சென்னையில் அதிர்ச்சி

சென்னை பேருந்து நிறுத்தத்தில் தூங்கிக்கொண்டிருந்த நபர் ஒருவர் கழுத்தறுத்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்து நிறுத்தத்தில் தூங்கிய நபர் கழுத்தறுத்து கொலை
News
பேருந்து நிறுத்தத்தில் தூங்கிய நபர் கழுத்தறுத்து கொலை

சென்னை செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். சாலைகளில் காகிதங்களைச் சேகரித்து வாழ்க்கையை நடத்திவருகிறார். பகலில் வேலையை முடித்துவிட்டு, இரவில் கிண்டி - வேளச்சேரி பிரதான சாலையிலுள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் தூங்குவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தியா என்பவர் கார்த்திக் அருகில் படுத்திருக்கிறார். அதிகாலையில் சந்தியா எழுந்தபோது, கார்த்திக் கழுத்து அறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கழுத்தறுத்து கொலை
கழுத்தறுத்து கொலை

கார்த்திக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்டி பகுதி போலீஸார், உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதைத் தொடர்ந்து, சந்தியா என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சந்தியா தேனாம்பேட்டையைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி.

இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாண்டியனும் சாலையில் காகிதங்கள் சேகரித்து வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், பாண்டியனின் நண்பரான கார்த்திக்குக்கு சந்தியாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், பழக்கம் நெருக்கமாகவே சந்தியா பாண்டியனை விட்டுவிட்டு கார்த்திக்குடன் சேர்ந்து வாழ்ந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலின் அடிப்படையில், தலைமறைவாக இருந்த பாண்டியனைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

"பாண்டியன் சந்தியாவை அடிக்கடி சந்தித்து தன்னுடன் வந்துவிடுமாறு வலியுறுத்திவந்திருக்கிறார். ஆனால், சந்தியா வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பாண்டியன் தன் நண்பர் பாஸ்கரனுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு இரவோடு இரவாக அவர் தங்கியிருந்த இடத்துக்கு வந்து கார்த்திகைக் கழுத்தறுத்து கொலை செய்திருக்கிறார்" என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கொலைசெய்த பாண்டியன், பாஸ்கர் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பரபரப்பான சாலையிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நடந்த கொலை அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.