Published:Updated:

திண்டிவனம்: பாதாளச் சாக்கடைப் பணியின்போது திடீரென சரிந்த மண்; புதையுண்டு தொழிலாளி பலியான சோகம்!

வடமாநிலத் தொழிலாளர் உயிரிழப்பு
News
வடமாநிலத் தொழிலாளர் உயிரிழப்பு

பாதாளச் சாக்கடைப் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் திண்டிவனம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

திண்டிவனம்: பாதாளச் சாக்கடைப் பணியின்போது திடீரென சரிந்த மண்; புதையுண்டு தொழிலாளி பலியான சோகம்!

பாதாளச் சாக்கடைப் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் திண்டிவனம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வடமாநிலத் தொழிலாளர் உயிரிழப்பு
News
வடமாநிலத் தொழிலாளர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியில் தற்போது பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்தப் பணியை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டுவருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் திண்டிவனம் ரொட்டிக்கார தெருவில் பாதாளச் சாக்கடைப் பணி நடைபெற்றது. இந்தப் பணியில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சிராஜ் மின்ச், ஜித்தர் நந்தி, பிளஸ்கோ, அமித் நாயக் ஆகிய நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

திண்டிவனம்
திண்டிவனம்

மாலை சுமார் 4 மணியளவில், சிராஜ் மிஞ்ச் சுமார் 8 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறங்கி வேலை செய்திருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டு, அவரை மூடியிருக்கிறது. உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் மண் அகற்றப்பட்ட நிலையில், சக தொழிலாளர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சிராஜ் மிஞ்சை மீட்டனர். தகவலின்பேரில் அங்கு விரைந்த 108 ஆம்புலன்ஸ் மூலம், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.

ஆனால், முன்பே இறந்துவிட்டதாக, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து திண்டிவனம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். பாதாளச் சாக்கடைப் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் திண்டிவனம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

எம்.பி  ரவிக்குமார்
எம்.பி ரவிக்குமார்

இந்த நிலையில், "திண்டிவனத்தில் பாதாளச் சாக்கடைக்காக பள்ளம் தோண்டும்போது, மேற்கு வங்க தொழிலாளி சிராஜ் மிஞ்ச் என்பவர் புதையுண்டு உயிரிழந்திருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இறந்தவரின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டம், 1979 (ISMA) தற்போது தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமைகள் (OSH) 2020 என்ற சட்டத்தொகுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தின்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்" என்று விழுப்புரம் எம்.பி துரை.ரவிக்குமார் கோரிக்கை விடுத்திருக்கிறார்.