Published:Updated:

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; உடல் நசுங்கி பலியான புது மாப்பிள்ளை - திருச்சியில் சோகம்

விபத்துக்குள்ளான பேருந்து
News
விபத்துக்குள்ளான பேருந்து

திருச்சி மாநகரப் பகுதிகளில் போட்டி போட்டுக்கொண்டு அதிக வேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், பொதுமக்களை அச்சுறுத்துவதோடு பல விபத்துகளை உண்டாக்குகின்றன.

Published:Updated:

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; உடல் நசுங்கி பலியான புது மாப்பிள்ளை - திருச்சியில் சோகம்

திருச்சி மாநகரப் பகுதிகளில் போட்டி போட்டுக்கொண்டு அதிக வேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், பொதுமக்களை அச்சுறுத்துவதோடு பல விபத்துகளை உண்டாக்குகின்றன.

விபத்துக்குள்ளான பேருந்து
News
விபத்துக்குள்ளான பேருந்து

திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து மத்திய பேருந்து நிலையத்தை நோக்கி தனியார் பேருந்து வந்தது. பேருந்தை ஸ்ரீரங்கம் கண்டியூரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் ஓட்டிவந்தார். பேருந்து பாரதியார் சாலையில் ஜேம்ஸ் பள்ளி அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது.

வேகத்தடையில் ஏறியும் நிற்காத பேருந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது ஏறி இறங்கி, சாலையோரம் நின்றிருந்த இன்னொரு தனியார் பேருந்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் சாலையோரம் சென்ற அந்த நபர் உடல் சிதறி, சம்பவ இடத்திலேயே பலியானார். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; உடல் நசுங்கி பலியான புது மாப்பிள்ளை - திருச்சியில் சோகம்

விசாரணையில் உயிரிழந்தவர் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (35) என்பது தெரியவந்தது. ரயில்வேதுறையில் உதவி அலுவலராகப் பணியாற்றிவந்த மோகன்ராஜுக்கு, கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருக்கிறது. விபத்து நடந்த பகுதியிலுள்ள ரயில்வே குடியிருப்பில் மனைவியுடன் மோகன்ராஜ் வசித்துவந்திருக்கிறார்.

ரயில் குடியிருப்பு பகுதியில் குடிநீர் கிடைக்காததால், முனீஸ்வரன் கோயில் அருகே மாநகராட்சி குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது, விபத்தில் சிக்கி பரிதாபமாக மோகன்ராஜ் பலியானது தெரியவந்தது. மோகன்ராஜ் பலியானது தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரின் மனைவி, உறவினர்கள் கதறியழுதது பார்ப்போரைக் கலங்கடித்தது. பேருந்தை ஓட்டிய டிரைவர் சுந்தர்ராஜ் வேகத்தடையின் மீது வேகமாக பேருந்தை இயக்கியதால், பேருந்து நிலை தடுமாறியிருக்கலாம் என்கின்றனர்.

விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து

விஷயமறிந்த அதிகாரிகளோ, டிரைவர் சுந்தர்ராஜ் லேசான மதுபோதையில் இருந்ததாகச் சொல்கின்றனர். இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருச்சி மாநகரப் பகுதிகளில் போட்டி போட்டுக்கொண்டு அதிக வேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள், பொதுமக்களை அச்சுறுத்துவதோடு, இப்படிப் பல விபத்துகளை உண்டாக்குகின்றன. அதிவேகத்தில் இயக்கப்படும் பேருந்துகளை அதிகாரிகள் பிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.