Published:Updated:

தூத்துக்குடி: ``அடகுவைத்த நகையை மீட்க கொலை செய்தேன்'' - போலீஸாரையே அதிரவைத்த நகைத் திருடன்!

ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்
News
ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்

தூத்துக்குடியில் அடகுவைத்த நகையை மீட்க, பக்கத்து வீட்டுப் பெண்ணின் நகையைத் திருடியதுடன், நகைக்காக கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

தூத்துக்குடி: ``அடகுவைத்த நகையை மீட்க கொலை செய்தேன்'' - போலீஸாரையே அதிரவைத்த நகைத் திருடன்!

தூத்துக்குடியில் அடகுவைத்த நகையை மீட்க, பக்கத்து வீட்டுப் பெண்ணின் நகையைத் திருடியதுடன், நகைக்காக கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்
News
ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே மேலமுடிமண் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் மனைவி இந்திராணி. ராஜ்குமார், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின் மகன் பேச்சியப்பன், கோவில்பட்டியில் இந்திராணியின் தம்பி கண்ணன் என்பவர் நடத்திவரும் ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் பேச்சியப்பனும், இந்திராணியும் மதுரையில் ஒரு துக்க வீட்டுக்குச் சென்றுவிட்டு கோவில்பட்டி வந்தனர். அங்கிருந்து பேச்சியப்பன் தன்னுடைய தாயை மேலமுடிமண் கிராமத்துக்கு பேருந்தில் அனுப்பிவைத்திருக்கிறார்.

இந்திராணி - கைதுசெய்யப்பட்ட ராமசாமி
இந்திராணி - கைதுசெய்யப்பட்ட ராமசாமி

இந்த நிலையில், நேற்று காலையில் கீழமுடிமண் கிராமத்தில் இறந்த உறவினரின் வீட்டில் விசேஷ நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் இந்திராணி கலந்துகொள்ளவில்லை. இதனால் அவரை அழைத்து வர, அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினர்கள் சிலர், இந்திராணியின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு வீடு உட்புறமாகப் பூட்டியிருந்தது. வீட்டுக்குள் மின்விசிறி ஓடும் சத்தமும், கேட்டிருக்கிறது. கதவை பலமுறை தட்டிப் பார்த்தும் சத்தமில்லாததால் ஒருவர், வீட்டின் பக்கவாட்டுச் சுவர் வழியாக, ஏறிக் குதித்து உள்ளே சென்றார்.

அங்கு இந்திராணி கழுத்தில் காயங்களுடன்  உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். தகவலறிந்த ஓட்டப்பிடாரம்  போலீஸார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.  விசாரணையில் இந்திராணி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயின், பீரோவில் இருந்த 14 சவரன் நகைகள் என மொத்தம் 16 சவரன் தங்க நகைகளும், பீரோவில் இருந்த ரூ.20,000 ரொக்கப் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இந்திராணி வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, நகைக்காக கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம்

அதே ஊரில் மது அருந்திவிட்டு ஊர்க்காரர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்த ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில், விசாரணை நடத்தினர். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உடனிருந்தார். அவருடன் போலீஸார் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோதே, ராமசாமிக்கு அதிகமாக வியர்த்துக் கொட்டியது. பதற்றத்துடனும் காணப்பட்டார். பின்னர் ராமசாமியிடம் மேற்கொண்ட விசாரணையில், நகையைத் திருடியதையும், இந்திராணியைக் கொலைசெய்ததையும் ஒப்புக்கொண்டார்.  

போலீஸாரின் விசாரணையில் ராமசாமி, ``நான் சரியாக வேலைக்குச் செல்லாததால் கடன் வாங்கினேன். அதனால் கடனைத் திருப்பிக் கொடுக்க, என்னுடைய தாயாரின் ஆறு சவரன் தங்க நகையை புதியம்புத்தூரிலுள்ள அடகுக்கடையில், என் நண்பரின் பெயரில் அடகு வைத்தேன். அந்த நகையை மீட்பதற்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் என்ன செய்வதென்று யோசித்தேன்.இந்திராணியின் மகன் கோவில்பட்டியில் வேலை பார்க்கிறார். பெரும்பாலும் இந்திராணி வீட்டில் தனியாகத்தான் இருப்பார். அதனால் அவரின் நகையைத் திருடி அடகுவைத்த நகையை மீட்கலாம் என நினைத்தேன்.

ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்
ஓட்டப்பிடாரம் காவல் நிலையம்

இரவில் அவரின் வீட்டின் பக்கவாட்டுச் சுவரில் ஏறிக் குதித்து வீட்டுக்குள் சென்றேன். தூங்கிக்கொண்டிருந்த இந்திராணி என்னைப் பார்த்ததும் கத்தினார். அவரின் கழுத்தை நெரித்துக் கொன்றேன். அவரின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்தேன். பீரோவை உடைத்து அதிலிருந்த இரண்டு தங்கச் சங்கிலி, 20,000 ரூபாய் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்'' எனச் சொல்லி போலீஸாரையை அதிரவைத்திருக்கிறார். நகைக்காக பெண் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.