Published:Updated:

`ஜே.பி.நட்டாவின் உதவியாளர் நான்...' - அமைச்சராக்குவதாகக் கூறி 3 மாநில எம்.எல்.ஏ-க்களிடம் மோசடி!

மோசடி நபர் கைது
News
மோசடி நபர் கைது ( சித்திரிப்புப் படம் )

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவின் உதவியாளர் என்று கூறி, எம்.எல்.ஏ-க்களிடம் மோசடி செய்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:

`ஜே.பி.நட்டாவின் உதவியாளர் நான்...' - அமைச்சராக்குவதாகக் கூறி 3 மாநில எம்.எல்.ஏ-க்களிடம் மோசடி!

மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டாவின் உதவியாளர் என்று கூறி, எம்.எல்.ஏ-க்களிடம் மோசடி செய்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

மோசடி நபர் கைது
News
மோசடி நபர் கைது ( சித்திரிப்புப் படம் )

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள்கள் பயணமாக மகாராஷ்டிராவுக்கு வந்திருக்கிறார். மகாராஷ்டிராவில் நடந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக பா.ஜ.க தோல்வியடைந்து வருவது குறித்தும், மாநகராட்சி, மக்களவைத் தேர்தல் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவிருக்கிறார் நட்டா. மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அரசு பதவி ஏற்று 10 மாதங்களாகிவிட்ட நிலையில், சொற்ப அமைச்சர்களுடன் அரசு செயல்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் 16 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் இருந்ததால், அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. தற்போது சுப்ரீம் கோர்ட் அதற்கு வழிவிட்டுவிட்டிருக்கிறது.

ஜே.பி.நட்டா
ஜே.பி.நட்டா

எனவே எம்.எல்.ஏ-க்கள், அமைச்சரவையை விரிவுபடுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு ஒருவர், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களிடம் கைவரிசையைக் காட்டியிருக்கிறார். மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களிடம் ஒருவர், தான் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவின் உதவியாளர் என்று கூறிக்கொண்டு அணுகியிருக்கிறார். அவர் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களிடம், `அமைச்சர் பதவி வாங்கித் தருகிறேன்' என்று ஆசைவார்த்தைக் கூறியிருக்கிறார். அதோடு அமைச்சர் பதவிக்கு லட்சக்கணக்கில் பணமும் கேட்டிருக்கிறார்.

சிலர் அவரை நம்பி பணமும் கொடுத்திருக்கின்றனர். விதர்பாவைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ விஜய் கும்பாரேயிடம் இது போன்று அமைச்சர் பதவி வாங்கிக் கொடுப்பதாக ஆசைவார்த்தைக் கூறி, 1.66 லட்சம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்மீது சந்தேகமடைந்த எம்.எல்.ஏ, அந்த நபர் குறித்து போலீஸில் புகார் செய்திருக்கிறார். உடனே போலீஸார் விசாரணையில் இறங்கினர். போலீஸாரின் விசாரணையில் மோசடியில் ஈடுபட்டிருப்பது குஜராத் மாநிலம், மோர்பி என்ற இடத்தைச் சேர்ந்த நீரஜ் சிங் ரத்தோட் என்று தெரியவந்தது.

கைது
கைது

உடனே போலீஸார் குஜராத்துக்குச் சென்று அவரைக் கைதுசெய்து அழைத்து வந்திருக்கின்றனர். அவரிடம் விசாரித்தபோது, பா.ஜ.க-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ-க்களிடம் அமைச்சர் பதவி வாங்கித் தருவதாகப் பேரம் பேசியிருப்பது தெரியவந்தது. மகாராஷ்டிரா, நாகலாந்திலும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களிடம் அமைச்சர் பதவி தருவதாகப் பணம் பேசியிருப்பது தெரியவந்தது.