Published:Updated:

படித்தது ப்ளஸ் டூ, ஒரு நாள் மோசடி வருவாயோ ரூ.3 கோடி- சைனா லிங்க் கேங் லீடர் போலீஸில் சிக்கியதெப்படி?

மோசடி நபர் கைது
News
மோசடி நபர் கைது

நாடு முழுவதும் போலீஸார்போல் நடித்து இணையதளம் மூலம், தினமும் ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்துவந்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:

படித்தது ப்ளஸ் டூ, ஒரு நாள் மோசடி வருவாயோ ரூ.3 கோடி- சைனா லிங்க் கேங் லீடர் போலீஸில் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் போலீஸார்போல் நடித்து இணையதளம் மூலம், தினமும் ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி செய்துவந்த நபர் கைதுசெய்யப்பட்டார்.

மோசடி நபர் கைது
News
மோசடி நபர் கைது

மும்பை உட்பட நாடு முழுவதும் போலீஸார்போல் நடித்து, இணையதளம் மூலம் பெண்களிடம் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துவந்தன. இந்த மோசடியால் மும்பையைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து மும்பை பாங்குர் நகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். கடந்த மார்ச் மாதம்தான் இந்த மோசடி குறித்து போலீஸாருக்குத் தெரியவந்தது. மோசடிப் பேர்வழிகள் வாட்ஸ்அப் அல்லது ஸ்கைப் மூலம் வீடியோ கால் செய்து பேசுவது வழக்கம். போனில் பேசும் தங்களை போலீஸ் அதிகாரியாக அறிமுகம் செய்துகொண்டு, ``உங்களுக்கு கூரியர் வந்திருக்கிறது... அதில் போதைப்பொருள் இருக்கிறது. இந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டுமென்றால், நாங்கள் சொல்லும் மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பதிவுசெய்ய வேண்டும்" என மிரட்டுவார்களாம்.

ஸ்ரீனிவாஸ் ராவ்
ஸ்ரீனிவாஸ் ராவ்

சம்பந்தப்பட்ட நபர் மோசடிப் பேர்வழிகள் அனுப்பும் மொபைல் ஆப்பை பதிவிறக்கம் செய்து வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவுசெய்தவுடன், அந்த போனை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து, சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக்கொண்டிருந்தனர். இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் பாங்குர் நகர் போலீஸ் எஸ்.ஐ விவேக் தாம்பே, ``கடந்த மார்ச் மாதம்தான் இந்த மோசடி குறித்து எங்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் துணையோடு வழக்கை விசாரிக்க ஆரம்பித்தோம்.

தனிப்படை போலீஸார் நான்கு நகரங்களில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்தது மகாராஷ்டிராவின் டிட்வாலாவைச் சேர்ந்த மகேந்திர ரொக்டே, முகேஷ் ஆகியோர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இது தவிர கொல்கத்தாவைச் சேர்ந்த சஞ்சய், அனிமேஷ் ஆகியோரும் இதே காரணத்துக்காகக் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் நான்கு பேரும் மோசடிப் பேர்வழிகள் கொடுக்கும் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் ஏஜென்ட்டுகளாகச் செயல்பட்டுவந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், மோசடிப் பணத்தைப் பெற நாடு முழுவதும் ஏராளமான வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்திவந்தது தெரியவந்தது. இவர்கள் அனைவரையும் ஸ்ரீனிவாஸ் ராவ் என்பவர் வழிநடத்தி வந்ததோடு, இந்தத் தொழிலுக்கு மூளையாகவும் செயல்பட்டிருக்கிறார். ஸ்ரீனிவாஸ் ராவ் சீன பிரஜைகளுக்காக வேலை செய்துவந்தார். வெறும் 12-வது வகுப்பு மட்டும் படித்துவிட்டு, 40 வங்கிக் கணக்குகள் மூலம் இணையதளக் குற்றங்களில் ஈடுபட்டு, தினமும் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்துவந்திருக்கிறார். அவருடைய 40 வங்கிக் கணக்குகளிலிருந்த ரூ.1.5 கோடி முடக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீனிவாஸ், மோசடி மூலம் கிடைக்கும் பணத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி அதை சீன பிரஜைகளுக்கு அனுப்பிவந்தார்.

கைது
கைது

அதோடு ஸ்ரீனிவாஸ் ராவ் தன்னுடைய மனைவியின் வங்கிக் கணக்குக்கு ரூ.25 லட்சத்தை அனுப்பியிருக்கிறார். எனவே, இந்த மோசடியில் அவரது குடும்பத்துக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்துவருகிறோம்.

ஸ்ரீனிவாஸ் ராவ் இந்த மோசடித் தொழிலுக்கு வருவதற்கு முன்பு, செக்யூரிட்டி அதிகாரியாகப் பணியாற்றிவந்தார். அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை, புனே, பிம்ப்ரி-சிஞ்ச்வாட், ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் வசிப்பவர்களிடம் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், இது குறித்து போலீஸாருக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது. அவர் விசாகப்பட்டினத்திலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்" என்று தெரிவித்தார்.