Published:Updated:

இலங்கைக்குத் தப்ப முயன்ற அகதி; உடந்தையாக இருந்த தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கைது!

நடுக்கடலில் பிடிபட்ட ஜனகனுடன் கடலோர காவல் படையினர்
News
நடுக்கடலில் பிடிபட்ட ஜனகனுடன் கடலோர காவல் படையினர்

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியிலிருந்து சட்ட விரோதமாக கள்ளத்தோணியில் இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்ற அகதி உட்பட ஐந்து பேரை கடலோர காவல் படையினர் கைதுசெய்திருக்கின்றனர்.

இந்திய கடலோர காவல் படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனுஷ்கோடி அருகே மூன்றாம் மணல் திட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்ற நபரை பிடித்து மண்டபம் மரைன் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜனகன் என்பதும், 2010-ல் இலங்கையிலிருந்து இங்கிலாந்து சென்று அங்கு அகதியாகத் தன்னை பதிவுசெய்து வேலை பார்த்து வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், இங்கிலாந்திலிருந்து மீண்டும் இலங்கை திரும்புவதற்கான அனுமதி கிடைக்காததால், ராமேஸ்வரம் கடல் மார்க்கமாகக் கள்ளத்தோணியில் இலங்கைக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறார். அதற்காக விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு வந்திருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் ஐந்து பேர்
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் ஐந்து பேர்

பின்னர் தனுஷ்கோடியிலிருந்து சிலர் பணத்தை வாங்கிக்கொண்டு சட்டவிரோதமாக ஜனகனை படகில் மூன்றாம் மணல் திட்டுவரை அழைத்துச் சென்று, `இங்கிருந்து இலங்கைக் கடற்படையினர் மீட்டு அழைத்துச் செல்வார்கள்’ என்று கூறி இறக்கிவிட்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஜனகனை படகில் சட்டவிரோதமாக அழைத்துச் சென்றவர்கள் குறித்து மரைன் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சச்சின், ஆனந்த பாலன், ஜெகதீஷ், ஆதித்யநாத் ஆகியோர் ஜனகனிடம் ரூ.60,000 பெற்றுக்கொண்டு படகில் இலங்கையில் இறங்கிவிடுவதாகக் கூறி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட மூன்றாம் மணல் திட்டில் இறக்கிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து, நால்வரையும் கைதுசெய்த மண்டபம் மரைன் போலீஸார் ராமேஸ்வரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். ஜனகனை புழல் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வாகனத்தில் கொண்டுசென்றனர்.