Published:Updated:

`40 வயசாகியும் ஏன் கல்யாணமாகல?' - பணியிடத்தில் கிண்டல் கேலி; மனஉளைச்சலில் விபரீத முடிவெடுத்த ஆசிரியை

மரணம்
News
மரணம்

சக ஆசிரியர்களின் கேலி, கிண்டலைத் தாங்கமுடியாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக, ரேவதி வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

`40 வயசாகியும் ஏன் கல்யாணமாகல?' - பணியிடத்தில் கிண்டல் கேலி; மனஉளைச்சலில் விபரீத முடிவெடுத்த ஆசிரியை

சக ஆசிரியர்களின் கேலி, கிண்டலைத் தாங்கமுடியாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக, ரேவதி வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மரணம்
News
மரணம்

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (70). இவர் மகள் பெயர் ரேவதி (40). ரேவதி புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்குத் திருமணமாகவில்லை. இந்த நிலையில்தான், பள்ளி ஆசிரியர்கள், `ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை, உனக்கு ஏதேனும் பிரச்னையா?' என்றெல்லாம் கேட்டு, ரேவதியைக் கேலி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சலில் இருந்த ரேவதி, ஒரு மாதம் வரையிலும் விடுப்பில் சென்றிருக்கிறார். விடுப்பு முடிந்து ஆசிரியை ரேவதி கடந்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்தபோதும், அதே கேள்வியை சக ஆசிரியர்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, ரேவதி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

சக ஆசிரியர்களின் கேலி, கிண்டலைத் தாங்கமுடியாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக, ரேவதி வாக்குமூலம் அளித்திருக்கிறார். கேலி, கிண்டலுக்குப் பயந்து ஆசிரியை உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ரேவதியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், நகர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ரேவதியின் தந்தை மாணிக்கத்திடம் பேசியபோது, "கொஞ்ச நாளாகவே வேலைக்குப் போக பிடிக்கலைனு என் மவ சொல்லுச்சு. ஏன், என்று விசாரிச்சப்ப, பள்ளி ஆசிரியர்கள் எல்லாம், `ஏன், இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்கேன்னு கிண்டல் பண்றாங்க'னு சொன்னா. நா உடனே, நீ அதையெல்லாம் கண்டுக்காம வேலைய பாருமான்னு சொன்னேன். இதனாலேயே, ஒரு மாசம் வரைக்கும் லீவு போட்டுட்டு, பிள்ள வீட்டுலதான் இருந்துச்சு. இப்போ, கொஞ்ச நாளாதான் ஸ்கூலுக்குப் போச்சு. இன்னைக்கு புள்ளையைப் பறிகொடுத்திட்டு நிற்கிறோம். என் பொண்ணு தற்கொலைக்கு காரணமானவங்க மேல உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றார்.