Published:Updated:

புதுக்கோட்டை: கல்லூரி மாணவியிடம் ஆபாசப் பேச்சு... லீக் ஆன ஆடியோ- பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்!

மாணவர்கள் போராட்டம்
News
மாணவர்கள் போராட்டம்

மாணவர்களிடம் ஆபாசமாகப் பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:

புதுக்கோட்டை: கல்லூரி மாணவியிடம் ஆபாசப் பேச்சு... லீக் ஆன ஆடியோ- பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்!

மாணவர்களிடம் ஆபாசமாகப் பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்கள் போராட்டம்
News
மாணவர்கள் போராட்டம்

புதுக்கோட்டை சேந்தாக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார். இவர் மன்னர் அரசு கலைக்கல்லூரியில், கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இவர், கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவியை, சக மாணவர் ஒருவருடன் தொடர்புப்படுத்தி பேசியிருக்கிறார். அதோடு அந்த மாணவியிடம், `எல்லாருக்கும் ஆசை இருக்கு, எனக்கும் ஆசை இருக்கு'... அதோடு அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளால் பேசியிருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி ஆசிரியரின் ஆபாச பேச்சினை போனில் ஆடியோ ரெக்கார்டிங் செய்து, சக மாணவிகளுக்கு அனுப்பியிருக்கிறார். அதனை மாணவிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுக்கோட்டை: கல்லூரி மாணவியிடம் ஆபாசப் பேச்சு... லீக் ஆன ஆடியோ- பணி நீக்கம்  செய்யப்பட்ட ஆசிரியர்!

இதையடுத்து, கல்லூரி முன்பு திரண்ட மாணவ, மாணவிகள் அனைவரும், `சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, அங்கு வந்த முன்னாள் மாணவர்கள் சிலர், ஆசிரியரின் வாகனத்தை அடித்து நொறுக்கினர். கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட, உடனே அங்கு வந்த கல்லூரியின் முதல்வர் இது தொடர்பாக விசாரித்து ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதன் பிறகு மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். சம்பந்தப்பட்ட மாணவி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு, பின்பு குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சக மாணவிகளிடம் பேசினோம். ``இதில் சம்பந்தப்பட்ட மாணவியும், மாணவரும் நட்பு ரீதியில் பழகி வந்தார்கள். ஆனால் அதனை தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஆசிரியர், மாணவியைக் கண்டிப்பது போன்று ஆபாச வார்த்தைகளில் பேசியிருக்காரு. அவளுக்கு அப்பா, அம்மா இல்லை. அத்தை, மாமா பரமாரிப்பில்தான் இருக்கிறாள். கண்டிக்கிறதா இருந்தா அவங்க மாமாக்கிட்ட சொல்லியே கண்டிச்சிருக்கலாம். மாணவியை தவறாக பயன்படுத்தப் பார்த்தாரு. எங்கிட்ட கேள்வி கேக்கும் போதும், எங்க முகத்தையோ, கண்ணையோ பார்த்து பேச மாட்டாரு. அதே மாதிரி, அப்பப்ப ஆபாசமாவே தான் பேசுவாரு. அவர் கிளாஸ்க்கு வந்தாலே, எங்களுக்கு எரிச்சல்தான் வரும். ஏற்கெனவே, இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் புகாராக சொல்லியிருக்கிறோம். ஆனா, நடவடிக்கை ஏதும் எடுக்கலை.
அவளோட போனை வாங்குறதுக்காக, பல்வேறு முயற்சிகளை எடுத்தாங்க. ஆனா, நாங்க விடலை.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை

அதே மாதிரி, அந்த பெண்ணையே புகார் கொடுக்கவிடாதபடி  சில முயற்சிகளை செஞ்சாங்க. ஆனா, இப்போ சைல்டு லைனில், சம்பந்தப்பட்ட மாணவி வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. ஆசிரியரை கல்லூரியை விட்டு நீக்குவதோட, அவர் மீது  வழக்கு பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கணும்'' என்றனர்.

கல்லூரி நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டபோது, "ஏற்கெனவே, இதுதொடர்பாக, புகார்கள் எதுவும் மாணவிகளிடமிருந்து வரவில்லை. கல்லூரியில் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து, மாணவிகளிடமிருந்து புகார் வந்தது. உடனே 6 பேர் கொண்ட கமிட்டி அமைத்து விசாரணை நடத்தினோம். அதில், ஆசிரியர் மீதான தவறு உறுதி செய்யப்பட்டதையடுத்து, முத்துக்குமார் மற்றும் மற்றொரு ஆசிரியரையும் பணிநீக்கம் செய்திருக்கிறோம். இது குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்திடமும், தலைமைக்கும் அனுப்பியிருக்கிறோம். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்கக்கூடாது என்று தற்போதிருக்கும் ஆசிரியர்களிடம் கடுமையாக கண்டித்திருக்கிறோம்" என்றனர்.