Published:Updated:

விழுப்புரம்: இரண்டரை வயதுக் குழந்தையைக் கொன்ற சித்தி - நீதிமன்றம் அதிரடி

கொலை
News
கொலை

இரண்டரை வயதுப் பெண் குழந்தையைக் கொலைசெய்த சித்திக்கு, ஆயுள் தண்டனையுடன் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்.

Published:Updated:

விழுப்புரம்: இரண்டரை வயதுக் குழந்தையைக் கொன்ற சித்தி - நீதிமன்றம் அதிரடி

இரண்டரை வயதுப் பெண் குழந்தையைக் கொலைசெய்த சித்திக்கு, ஆயுள் தண்டனையுடன் அபராதம் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது விழுப்புரம் மகளிர் நீதிமன்றம்.

கொலை
News
கொலை

விழுப்புரம், சித்தேரிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷிமிரலுதீன். 2019-ம் ஆண்டு இவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்ததும் தாய் இறந்துவிட்டார். எனவே, பாத்திமா தந்தையின் அரவணைப்பில் வளர்ந்துவந்திருக்கிறார். இதையடுத்து, அப்சனா என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் ஷிமிரலுதீன். இந்த நிலையில், சிறுமி பாத்திமாவுக்கு சர்க்கரைநோய் இருந்துவந்திருக்கிறது. இதனால், அடிக்கடி குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதைச் சகித்துக்கொள்ள முடியாத அப்சனா, குழந்தையைத் துன்புறுத்திவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 2021-ம் ஆண்டு, ஜூலை மாதம் பாத்திமா வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். 

விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம் நீதிமன்றம்
தே.சிலம்பரசன்

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, பாத்திமாவின் மாமா முகமது ஷாகிர் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி  வழக்கு பதிவுசெய்த போலீஸார், உடற்கூறாய்வு முடிவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது சிறுமி பாத்திமாவின் சித்தி அப்சனாவே, சிறுமியின் நெஞ்சை காலால் அழுத்திக் கொடூரமாக கொலைசெய்தது உறுதியானது. இதையடுத்து அப்சனாவைக் கைதுசெய்த போலீஸார், அவரைச் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. அனைத்துத் தரப்பு விசாரணையும் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, நேற்று (26th) அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி ஹெர்மிஸ். இரண்டரை வயதுக் குழந்தையைக் கொலைசெய்த அப்சனாவுக்கு, தனி சட்டப்பிரிவுகளின்படி நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனை உட்பட ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டதோடு, 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.